புலிகள் மீதான தடை - மீண்டும் பட்டியலில் சேர்த்தது ஐரோப்பிய ஒன்றியம்!
06 Feb,2021
ஐரோப்பிய ஒன்றியம் தனது பயங்கரவாத பட்டியலை மேலும் ஆறு மாதங்களுக்கு புதுப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 21 குழுக்கள் மற்றும் 14 தனிநபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
2001 செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து யு.என்.எஸ்.சி தீர்மானத்தின் பிரகாரம் 1373/2001 ஐ அமுல்படுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியம் முதலில் பட்டியலை வெளியிட்டது. வழக்கமான இடைவெளியில் பட்டியல் மதிப்பாய்வு செய்யப்படுகின்றது.
குறைந்தது ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் இடையில், வழக்கமான தகவல் பரிமாற்றத்தின் அடிப்படையில் பட்டியல்களில் உள்ளடக்கங்கள் செய்யப்படுகின்றன.
இதன்படி, 2006 மே 29 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.