லண்டன் தமிழர்களே ஜாக்கிரதை- பாலித்தீன் பைகளை முகத்தில் கட்டும் கொடூரம்: வென்டிலேட்டர்கள் இல்லைஸ
04 Jan,2021
லண்டனில் பெருகி வரும் கொரோனாவால், வைத்தியசாலைகள் நிரம்பி வரும் நிலையில். தமிழ் மருத்துவர் சொன்ன விடையங்களை இங்கே நாம் தமிழர்களுடன் பகிர விரும்புகிறோம். இனி புதிதாக வரும் நோயாளிகளுக்கு வென்டிலேட்டர்கள் இல்லை. இந்த உயிர் காக்கும் இயந்திரம் பொருத்தப்பட்ட நபர்கள் இறந்தால். அதனை உடனே சுத்தம் செய்து வேறு ஒரு நபருக்கு பொருத்துகிறோம். இறந்த நபரின் கிருமிகள், மற்றும் கொனாரா துகள்கள் அந்த வென்டிலேட்டரில் ஒட்டிக் கொண்டு இருக்கும். அதனால் அதனை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு 24 மணி நேரம் பிடிக்கும்.
ஆனால் தற்போது உள்ள அவசர நிலையால், நாம் அதனை உடனே சுத்தம் செய்து மற்ற நபருக்கு கொடுக்கிறோம். இது பெரும் ஆபத்தான ஒரு விடையம். அது போக சிலருக்கு பாலித்தீன் பைகள் போன்ற பலூன்(காற்று நிரம்பிய) கழுத்தில் மாட்டி விடுகிறோம். அதனூடாக ஒரு அழுத்தத்தை கொடுத்து இலகுவாக சுவாசிக்க செய்கிறோம். மேலும் அவர்களது கிருமிகள் பரவாமல் இருக்க இந்த யுக்தியை பயன்படுத்துகிறோம். இது வென்டிலேட்டர் இல்லை என்பதனால் கையாளப்படுகிறது. மேலும் சொல்லப் போனால் எலும்பு முறிவு வைத்தியர், பிள்ளைகளை பார்க்கும் (பீடியாட்ரீஷன்) போன்ற வைத்தியர்கள் அனைவருமே கொரோனா வைத்தியத்தில் இறங்கியுள்ளார்கள்.
இதனால் கேன்சர் நோயாளிகளுக்கு கூட சரியான சிகிச்சை வழங்கப்படுவது இல்லை. அவர்களை கவனிக்கும் மருத்துவர்கள் கூட கொரோனா நோயாளிகளை கவனிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். ஒரு நாளைக்கு 17 தொடக்கம் 15 மணி நேரம் வேலை செய்ய வேண்டி உள்ளது. அது கூட போதவில்லை. பலர் மன அழுத்தத்தில் உள்ளோம். இன்று எனது வேலயை முடித்துக் கொண்டு வீடு திரும்பினால். அடுத்த நாள் நான் வரும் போது, நான் ரீட்மென்ட் கொடுத்த பல கொரோனா நோயாளிகள், பிளாஸ்டிக் பைகளில் பிணமாக கிடப்பார்கள்.
அவர்களில் பலர்ஸ நான் இறந்தால், என் மகளிடம் இதனை சொல்லி விடுங்கள்ஸ.. என் மனைவிக்கு இதனைச் சொல்லுங்கள். என் மகனுக்கு நான் இப்படி ஆசைப்பட்டேன் என்று சொல்லி விடுங்கள். என் அம்மாவுக்கு நான் செய்தது பிழை என்று சொல்லி விடுங்கள் என்று என்னிடம் கூறும் போது. அதனை நான் எழுதி வைத்திருப்பது வழக்கம். ஏன் எனில் அவர்கள் மறு நாள் உயிரோடு இருப்பார்களா ? என்று எனக்கு தெரியவில்லை என்கிறார் அந்த தமிழ் மருத்துவர். உண்மையில் பிரித்தானியாவில், அதிலும் லண்டனில் பல நூறு தமிழ் மருத்துவர்கள், இவ்வாறு இரவு பகல் பாராது வேலையாற்றி வருகிறார்கள்.
இந்த சமூகத்தில் எமது தமிழ் இனம் ஆற்றிவரும் அளப்பரிய சேவை இவை. இதனை நாம் எந்த ஒரு காலத்திலும் மறக்க முடியாது. அது போக தயவு செய்து வீணகாக வெளியே சென்று, கொரோனாவை விலைக்கு வாங்க வேண்டாம் தமிழர்களே. சற்று பொறுமையோடு இருந்து கொள்ளுங்கள். கவனமாகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வைத்தியசாலைக்கு வந்தால் மட்டுமே, ஏனடா இங்கே வந்தோம் என்று நினைக்க தோன்றும்.
அந்த அளவு கொடுமையாக இருக்கும். எனவே அதனை தவிர்த்துக் கொள்ளுங்கள் என்கிறார் அந்த தமிழ் மருத்துவர்.