மிகச் சிறந்த தடுப்பூசியைத் தருவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் : இராணுவத் தளபதி
30 Dec,2020
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான அடைவுகளின் முன்னேற்றத்திற்கமைய அதற்கான தடுப்பூசியை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு முன்னுரிமை வழங்குமென்று நம்புவதாக கொவிட் 19 தொற்று பலவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
லெப்டினன்ட் ஜெனரல் பதவியிலிருந்து ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற இராணுவத் தளபதி கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்தார். உலக நாடுகளில் உள்ள கொவிட் தடுப்பூசிகளில் இருந்து நாட்டிற்குப் பொருத்தமான தடுப்பூசி பெற்றுக் கொள்வது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். பெரும்பாலும் நன்கொடை என்ற அடிப்படையில் இலங்கைக்கு தடுப்பூசி கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகிறது.
இதேவேளை, பிரித்தானியாவில் தற்சமயம் இனங்காணப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் முன்னைய வைரசை விட 70 மடங்கு வேகத்தில் பரவி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.