இதுவரை மூதூர் பிரதேசத்தில் அடையாளங் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள்.
மேலும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
இதுவரை மூதூர் பிரதேசத்தில் 21 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். நேற்று மேலும் இரண்டு பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு. மூதூர் பொலிஸ் - 12
மின்சார நிலைய உள் வீதி - 01
இதன் காரணமாக பின்வரும் பிரதேசங்கள் பொலிசாரால் முடக்கப்பட்டுள்ளது. எனவே குறித்த பிரதேசத்துக்குள் நுழைவதும் குறித்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் வெளியில் வருவதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
நேற்று சுகாதார வைத்திய அதிகாரி தலமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் .
01. மறு அறிவித்தல் வரும் வரை சகல வர்த்தக நிலையங்கள், மதஸ்தலங்கள், மத்ரசாக்கள், கல்வி நிலையங்கள், வாராந்த சந்தைகள் போன்றவற்றை மூடுதல்.
02. கொரோனா அடையாளங் காணப்பட்ட பிரதேசங்களுக்கு செல்வதை முற்றாக தவிர்த்துக் கொள்ளல்.
03. திருமண நிகழ்வுகள் மற்றும் ஏனைய ஒன்றுகூடல்களை தவிர்த்துக் கொள்ளல்.
04. அத்தியாவசிய தேவை கருதி ஒருவர் மாத்திரம் வெளியே செல்லுதல்.
05. சுகாதார வழிகாட்டல்களை மிக இறுக்கமாக பின்பற்றல்.
மேற்கூறிய தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதோடு மேலும் இந்த வைரஸ் எமது பிரதேசத்தில் பரவாமல் தடுப்பதற்கு பின்வரும் சுகாதார வழிகாட்டல்களை கடைபிடிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.
☆ முகக்கவசம் அனிவதை எல்லோரும் கட்டாயமாக கடைபிடித்தல்.
☆ சமூக இடைவெளியை கண்டிப்பாகப் பேனுதல்.
☆ அடிக்கடி கைகளை செனிடைசர் மூலம் கழுவிக் கொள்ளுதல்.
☆ ஒன்றுகூடல்களை தவிர்த்து அத்தியவசிய தேவை கருதி ஒருவர் மாத்திரம் வெளியே செல்லுதல் .
போன்ற சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி மேலும் இந்த வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.