திருகோணமலை நகரை அண்டிய பகுதியில் 15 பேருக்கு கொரோனா தொற்று!
திருகோணமலை மாவட்டத்தின் நகரை அண்டிய பிரதேசத்தில் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோரள தெரிவித்துள்ளார்.
இதன்படி, கிழக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைய திருகோணமலை கல்விக் கோட்டத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் மறு அறிவித்தல்வரை மூடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் சுகாதாரத் துறையினர் விடுத்துள்ள அறிவுறுத்தல்களை முற்றாக கடைப்படித்தல் இன்றியமையாயதது என அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணல், கைகளைக் கழுவுதல், அநாவசிய பயணங்களைத் தவிர்த்தல் என்பவற்றைக் கடைப்பிடிக்குமாறு அரசாங்க அதிபர் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டில் மேலும் 330 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 592 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 261ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 715 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 28 ஆயிரத்து267 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
இன்னும் எட்டாயிரத்து 823 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 171 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை கல்விக் கோட்ட பாடசாலைகள் மூடப்பட்டன!
திருகோணமலை கல்விக் கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாளை முதல் மறு அறிவிப்பு வரை பாடசாலைகள் மூடப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.