ஒரு பெண், திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் செல்லும்போது குத்து விளக்கை ஏற்றச்சொல்வது ஏன்?
திருமணங்கள் (wedding) சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்வார்கள். “திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர்” என்ற பழமொழியை வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி நான் கேட்டிருப்போம். ஆம்,
உணமைதான் திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், ஆதாரமாகவும் அமையும் உறவே கணவன் மனைவி (Husband and Wife) உறவு. ஒருவரை ஒருவர் தனக்குத்தான் பாத்தியம் என்று எண்ணுகின்ற உறவே தாம்பத்திய உறவு.
உப்பையும், கசப்பையும், இனிப்பாக்க வல்லது இவ்வுறவு. புது புது உறவுகளை உருவாக்க கூடியது.
அதுவும், இந்திய திருமணம் (marriage ceremony) என்றாலே வண்ணமயமான கொண்டாட்டம் என்று கூறலாம். தற்போது உள்ள இளைஞர்கள் தங்களின் திருமணங்களை வித்தியாசமாக யோசித்து நடத்தி கொள்கின்றனர். இந்நிலையில், ஒரு பெண், திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் செல்லும் போது குத்து விளக்கை ஏற்றச்சொல்வது ஏன்?, அதன் காரணம் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய ஐந்து நற்குணங்கள், இந்த குத்துவிளக்கில் உள்ள ஐந்து முகங்ககளை ஏற்றுவதன் மூலம் உறுதி அளிப்பதாக அர்த்தம்!
என்ன இது, குத்துவிளக்குக்கும் பெண்ணுக்கும் என்ன சம்பந்தம் என்று தானே யோசிக்கிறீர்கள்.
REPORT THIS AD
இதற்கு விளக்கம் உண்டு முத லில்இந்த குத்துவிளக்கின் பாகங்களைப்பற்றி பார்ப்போம்.
குத்துவிளக்கின் தாமரைப்போன்ற பீடம் – பிரம்மாவையும்
குத்துவிளக்கின் நடுத்தண்டு – விஷ்ணுவையும்
நெய் எறியும் அகல் – சிவனையும்
திரி – தியாகம்
தீபம் – திருமகளையும்
சுடர் – கலைமகளையும் குறிக்கிறது
குத்துவிளக்கில் உள்ள ஐந்து முகங்களும், பெண்ணுக்கு வேண்டிய அன்பு, அறிவு, உறுதி, நிதானம், பொறுமை போன்ற ஐந்து நற்குணங்களை குறிப்பதாகும்.
அதனால்தான் ஒரு பெண் திருமணமாகி முதல் முறையாக தனது கணவன் வீட்டிற்கு அதாவது புகுந்த வீட்டிற்கு வரும்போது முதல் வேலையாக அப்பெண்ணைக் குத்துவிளக்கை ஏற்றச் சொல்லி, அந்த குத்து விளக்கில் ஏற்றப்பட்டதீபம் மூலமாக வீடுமுழுக்க ஒளிபரவச் செய்கின்றனர்.