ஐசிஐசிஐ வங்கி இலங்கையில் தனது செயல்பாட்டை நிறுத்துகிறது
27 Oct,2020
இந்தியாவில் செயல்படும் தனியார் வங்கிகளில் முக்கியமானது ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி. இந்த வங்கி இலங்கையிலும் செயல்பட்டுவருகிறது. இந்தியாவில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, இலங்கையில் தன்னுடைய செயல்பாட்டை நிறுத்துவதற்கு முடிவு செய்தது. அதனையடுத்து, இலங்கை மத்திய வங்கியின் நாணய வாரியத்திடம் இதுதொடர்பாக ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கோரிக்கைவைத்தது. இந்த கோரிக்கையை பரிசீலித்த நாணய வாரியம், ஐ.சி.ஐ.சி.ஐயின் கோரிக்கைக்கு ஒப்புதல் வழங்கியது. இலங்கையில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக்கு வழங்கப்பட்ட உரிமமும் ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி தாக்கல் செய்துள்ள அறிக்கையில், “நாணய வாரியம் விதித்துள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி இணங்கியுள்ளதாக வங்கிக் கண்காணிப்பு இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இலங்கையில் தொழிலை நிறுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டு, வங்கித் தொழில் செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது அக்டோபர் 23ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.