இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 33 ஆவது நினைவு தினம்
21 Oct,2020
இந்திய இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களின் 33 ஆவது நினைவு தினம் யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பிரதி பணிப்பாளர், பிரதம கணக்காளர் தாதியர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் என பலரும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
இலங்கைக்கு அமைதிப் படையாக வந்த இந்திய இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டிருந்த வேளையில், கடந்த 1987ஆம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து, மேற்கொண்ட தாக்குதலில் 21 உத்தியோகத்தர்கள் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.