சத்தமின்றி சடலமாக கிடக்கும் தமிழர்கள் உடல்கள்: என்ன தான் நடக்கிறது புகைப்படம்
19 Oct,2020
வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாணிக்கர் வளவுப்பகுதியில் வீடொன்றில் இருந்து இரண்டு பேரின் சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் இரண்டு சடலங்கள் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.சம்பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை பொலிசார், தலையில் பாரிய வெட்டுக்காயங்களுடன் காணப்பட்ட இரண்டு சடலங்களை மீட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நடந்தது எந்த அயலவர்களுக்கும் தெரியாது. இது இவ்வாறு இருக்க, மேலும் ஒருவர் பலத்த காயங்களோடு சுய நினைவை இழந்து அங்கே இருந்ததை கண்ட பொலிசார் அவரை அவசரமாக வைத்தியசாலையில் சேர்த்துள்ளார்கள். அவரும் உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதாக இணையம் மேலும் அறிகிறது.
குறித்த சம்பவத்தில் மாணிக்கர் வளவு கிராமத்தின் கிராம அபிவிருத்திசங்கத்தலைவரான கோபால் குகதாசன் 40 (4 பிள்ளைகளின் தந்தை), மற்றும் கரிப்பட்ட முறிப்பை சேர்ந்த சிவனு மகேந்திரன் வயது 34 ஆகிய இருவர் சாவடைந்ததாக பொலிசாரால் அடையாளம் காணப்பட்டடுள்ளனர்