சிறிகாந்தாவை தலைமைக்கு முன்மொழிகிறார் விக்கி!
16 Oct,2020
சட்டத்தரணி சிறிகாந்தாவின் தலைமையில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணி சிறிகாந்தாவின் தலைமையில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணி சிறிகாந்தாவுக்கு, 40 வருட அரசியல் அனுபவமும், திறமையும், அதேநேரம் பணிவும் இருப்பதாகவும், எனவே, அனைத்து தமிழ் கட்சிகளும் சிறிகாந்தாவின் தலைமையில் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் எனவும், அவர் அழைப்பு விடுத்துள்ளார்.