பாரிஸ் வசிக்கும் தமிழ் குடும்பத்தினரின் படுகொலைகளின் பின்னணி என்ன?

04 Oct,2020
 

 
 
 
உள் குடும்பத்தில் நேர்ந்த உயிரிழப்புகள் பாரிஸ் தமிழர்கள் மத்தியில் பெருந் துயர் சம்பவம் தொடர்பாகப் புதிய தகவல்கள்;
பாரிஸின் புறநகரான நுவாசி – லூ- செக்கில் (Noisy-le-Sec) நிகழ்ந்த உள் குடும்ப உயிரிழப்புகள் அந்தப்பகுதியில் மட்டுமன்றி பிரான்ஸ் முழுவதும் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
 
பத்து வயதுக்குட்பட்ட நான்கு குழந்தைகள் கூட்டாகப் கொலையுண்ட சம்பவம் குறித்து நுவாசி- லூ- செக் நகரின் மேயர் ஒலிவியர் சறாபேரூஸ் (Olivier Sarrabeyrouse) அதிர்ச்சியும் கவலையும் வெளியிட்டிருக்கிறார்.
 
“அமைதியான பின்னணி கொண்ட ஒரு குடும்பத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தை தன்னால் நம்ப முடியாதுள்ளது” என்று மேயர் தனது ரூவீற்றரில் பதிவிட்டிருக்கிறார்.
 
அண்மையில் மேயராகப் பதவி ஏற்பதற்கு முன்னரான காலத்தில் அந்தச் சிறுவர்கள் சிலரது பாடசாலைத் தலைமை ஆசிரியராகத் தான் பணிபுரிந்ததை மேயர் நினைவு கூர்ந்துள்ளார்.
 
இந்தத் துயரச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவர்கள், குடும்பத்தவர்கள், அயலவர்களை ஆற்றுப்படுத்துவதற்காக மனநல உதவி மையம் ஒன்று (cellule psychologique) உடனடியாகத் திறக்கப்படும் என்று அவர் கூறியிருக்கிறார்.
 
பொபினி(Bobigny) நீதி நிர்வாகப்பிரிவுக்குட்பட்ட புலன் விசாரணையாளர்கள் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துகின்றனர். கொலைகளுக்கான மூல காரணம் என்ன என்பது இன்னமும் கண்டறியப்படவில்லை.
 
புலம் பெயர்ந்து வசிக்கும் தமிழரான இளம் குடும்பஸ்தர் ஒருவரே இந்தப் படுகொலைகளைப் புரிந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
 
தனது மனைவி, கைக்குழந்தை உட்பட இரு குழந்தைகள் மற்றும் அவரது மூத்த சகோதரியின் இரு குழந்தைகள் (5, 9வயது) ஆகிய ஐவரையுமே கத்தி மற்றும் சுத்தியல் என்பவற்றால் தாக்கிக் கொலை செய்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
 
18 மாதங்களேயான தனது கைக்குழந்தையைக் கொல்லும் அளவுக்கு பாதிக்கப்பட்ட மனநிலையில் அவர் இருந்திருக்கிறார்.
 
முதலில் தனது வீட்டுக்குள் வைத்து மனைவியையும் இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு அருகே மற்றொரு வீட்டில் வசிக்கும் தனது சகோதரி குடும்பத்தினரை அங்கு வரவழைத்து அவர்களையும் தாக்கியுள்ளார்.
 
சகோதரியும் அவரது கணவரும் படுகாயமடைந்துள்ளனர். அவர்களது ஐந்து மற்றும் 9 வயதான இரு குழந்தைகள் தாக்கிக் கொல்லப்பட்டுள்ளனர்.
 
13 ,15 வயதுகளையுடைய ஏனைய இரு வளர்ந்த பிள்ளைகள் ஒருவாறு தமது மாமனாரின் பிடியில் இருந்து தப்பியோடியுள்ளனர்.
 
அவ்வாறு காயத்துடன் தப்பியோடிய சிறுவர்களில் ஒருவனே அருகே அமைந்திருந்த மது அருந்தகம் ஒன்றுக்குள் சென்று தஞ்சமடைந்துள்ளான்.
 
தனது மாமனார் எல்லோரையும் தாக்கிக் கொல்கின்றார் என்ற தகவலை அச்சிறுவனே அங்கிருந்தோரிடம் முதலில் தெரியப்படுத்தி உள்ளான்.
 
அந்த மது அருந்தகத்தின் உரிமையாளரான மொஹமெட் ஹெமானி (Mohamed Hemani) என்பவர் ஊடகம் ஒன்றிடம் கூறுகையில்..
 
“13 வயதான சிறுவன் பதற்றத்துடன் ஓடி வருகிறான், தலையில் இரத்தம் வழிகிறது. மாமா என்னை சுத்தியலால் தாக்குகின்றார் என்று அவன் கதறுகிறான்”
 
“அவனுக்குப் பின்னால் யாரும் வரவில்லை. நான் அவனைப்பாதுகாத்துக் கொண்டு பொலீஸாருக்கும் அவசர சேவையினருக்கும் அழைப்பு விடுத்தேன்”
 
புற்றி நுவாசி(Petit-Noisy) என்னும் பகுதியில் இயங்கும் அந்த அருந்தக உரிமையாளர் இப்படி விவரிக்கிறார்.
 
சம்பவங்களை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்த வேறு சிலரும் இவ்வாறு தமது அனுபவங்களை ஊடகங்களிடம் தெரிவித்திருக்கின்றனர்.
 
கொலைகளைப் புரிந்த இளம் குடும்பஸ்தர் மிகவும் அமைதியானவர் என்று அயலவர்கள் கூறுகின்றனர்.
 
இப்படிக் கோரமாகக் கொலைகளைப் புரிந்தாரா என்பதை அவர்கள் நம்ப மறுக்கின்றனர். அவர்களுக்குள் குடும்பப் பிணக்குகள் இருப்பதாகத் தாங்கள் அறியவில்லை என்கின்றனர்.
 
உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த அவர் கடந்த சில நாட்களாக தீவிர மன அழுத்தத்துக்கு ஆளானவர் போன்று காணப்பட்டார் என்ற ஒரு தகவலும் அயலவர்கள் மத்தியில் பேசப்படுகிறது.
 
கொலைகளைப் புரிந்த அவர் தன்னைத் தானே கொல்லும் நோக்குடன் உடலில் பல இடங்களில் வெட்டிக் காயப்படுத்தியிருக்கிறார்.
 
அவசர சேவையினர் அவரை மீட்டபோது அவர் சுய நினைவிழந்து கோமா நிலையில் கிடந்துள்ளார். தற்சமயம் பாரிஸின் புறநகரப் பகுதி மருத்துவமனை ஒன்றில் அவருக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.
 
புலம் பெயர் தமிழ் சூழலில் உள்குடும்பங்களில் நிகழும் இத்தகைய கொலைகள் அதிகரித்துவருகின்றன. பெற்றவர்களே தமது சிறு பிஞ்சுகளை கோரமாகக் கொல்லும் அளவுக்கு நிலைமை செல்கிறது.
 
ஏற்கனவே நெருக்கடிகள், மன அழுத்தங்கள் மிகுந்த புலம்பெயர் வாழ்வு மேலும் சிதைவடைந்து செல்கின்றதா?
 
கொரோனா வைரஸ் முடக்கங்களின் பின்னர் நாளாந்த வாழ்வில் எதிர்கொள்ளும் பெரும் நெருக்கடிகளும் அவை உருவாக்கும் மன அழுத்தங்களும் சிலரை இது போன்ற குரூரமான முடிவுகளை நோக்கித் தள்ளிவிடக் காரணமாகின்றனவா?
 
லண்டன் உட்பட தமிழர்கள் மத்தியில் அண்மைக்காலத்தில் நிகழ்ந்த இதுபோன்ற உள் குடும்பப் படுகொலைச் சம்பவங்களுக்கான காரணிகளைக் கவனத்தில் எடுக்காமலேயே அவற்றை கடந்த போய்க் கொண்டிருக்கின்றோமா?
 
“மிருக வெறி” என்று மேலெழுந்தவாரியாகக் கருத்துச் சொல்லிவிட்டுப் போகின்ற ஒரு விவகாரமா இது? (மிருகங்கள் தம் குட்டிகளைக் கொல்வதில்லை)
 
குற்றம் கண்டுபிடிக்கும் சட்டரீதியான விசாரணைகளுக்குப் புறம்பாகச் சிலர் சமூக நோக்கு சார்ந்த இத்தகைய முக்கிய கேள்விகளையும் முன்வைக்கின்றனர்.
 
குடும்பக் கட்டமைப்பில் நிகழும் இத்தகைய உட்சிதைவுகள் சமூக நோக்குடையவர்களால் விவாதிக்கப்படவும் ஆராயப்படவும் வேண்டிய முக்கிய விவகாரமாக மாறியுள்ளன.
 
இலங்கைத் தமிழர் ஐவர் கோரமாகக் கொலை! ஐவர் உயிருக்குப் போராட்டம்
 
பிரான்ஸின் தலைநகரான பாரிசிற்கு அருகிலுள்ள Noisy-le-Sec நகரில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற வன்முறை காரணமாக இலங்கைத் தமிழர்கள் ஐவர் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.
 
கொல்லப்பட்ட மற்றும் படுகாயமடைந்த அனைவரும் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவருகிறது. கொல்லப்பட்டவர்களில் கைக்குழந்தை ஒன்று, நான்கு வயதுக் குழந்தை ஒன்று, 14 வயதுடைய இருவர், 18 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் எனவும் அவர் மேலும் தகவல் தந்துள்ளார்.
 
Noisy-le-Sec, (Seine-Saint-Denis) நகரின் rue Emmanuel Arago வீதியில் உள்ள இரு குடும்பங்களுக்கு இடையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு குடும்பங்கள் இங்கு ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள் என்றும் தகவல் கிடைக்கிறது.
 
உடல்கள் இப்பொழுது வரை அந்த வீட்டிலேயே உள்ளன. சடலங்களை எடுத்துச்செல்லும் வாகனம் சம்பவ இடத்துக்கு வந்திருக்கிறது. பொலிசார் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
 
சம்பவம் நடைபெற்றவுடன், கொலை நடைபெற்ற இடத்திலிருந்து தப்பிவந்த சிறுவன் ஒருவன் இந்த வீதியில் உள்ள மதுச்சாலை ஒன்றுக்கு படுகாயமடைந்த நிலையில் வந்து உதவிக்குழுவை அழைக்கும் படி கோரியுள்ளான்.
 
“எனது மாமா என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொலை செய்துவிட்டார்” என குறித்த சிறுவன் மதுச்சாலையின் நிர்வாகியிடம் தெரிவித்துள்ளான். சம்பவ இடத்துக்கு சில நிமிட இடைவெளியில் வந்து சேர்ந்த காவல்துறையினர், சம்பவ இடத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 
வீடு முழுவதும் இரத்தம் தெறித்து, இரத்த வெள்ளத்தில் ஐந்து பேரின் சடலங்களை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். மேலும் ஐவர் படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
 
மரணமடைந்தவர்களில் சிறுவர்களும் உள்ளனர் என காவல்துறையினர் உறுதிப்படுத்தினார்கள். “சம்பவ இடம் மிகவும் பயங்கரமாக இருந்தது. எங்களில் பலர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். கத்தி ஒன்றும் பெரிய சுத்தியல் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது” என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
தாக்குதல் நடத்திய நபர் சம்பவ இடத்தில் ‘கோமா’ நிலையில் இருந்ததாகவும், இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் எனவும் பிரெஞ்சு காவல்துறையினர் தெரிவித்தனர். விசாரணைகள் நடைபெற்று வருகின்றது. கொலைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை.
 
இச்சம்பவம் தொடர்பாகத் தகவல் தந்த மற்றொரு பத்திரிகையாளர் பின்வரும் தகவலைத் தெரிவித்தார்.
 
“குடும்பப் பிணக்குகள், வன்முறைகளாக வெடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துவரும் பின்னணியில் மற்றொரு படுகொலை இன்று பட்டப்பகலில் பாரிஸ் புறநகரான Noisy-le-Sec (Seine-Saint-Denis) பகுதியில் இடம்பெற்றிருக்கிறது.
 
நபர் ஒருவரின் மோசமான தாக்குதலில் நான்கு சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் மூவர் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
 
உயிரிழந்த அனைவரும் ஈழப் பின்னணி கொண்டவர்கள் எனத் தெரிகிறது.
 
இன்று பகல் நிகழ்ந்த இக் குடும்பப் படுகொலைகள் தொடர்பில் வெளியான தகவல்கள் வருமாறு:
 
Rue Emmanuel Arago தெருவில் உள்ள வீடொன்றில் உயிரிழந்தவர்களது மாமனார் என்று கூறப்படும் ஆண் ஒருவர் கத்தி மற்றும் சுத்தியல் கொண்டு வெறித்தனமாகப் பலரைத் தாக்கி உள்ளார் என்று கூறப்படுகிறது. அவரது பிடியில் இருந்து தப்பியோடிய இளைஞர் ஒருவர் அருகே உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இத்தகவலைத் தெரிவித்திருக்கிறார். அதனையடுத்து பொலீஸாரும் அவசர சேவையினரும் அங்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
 
மூன்று மாடிகள் கொண்ட வீட்டின் கதவை உடைத்து உள் நுழைந்த பொலீஸார் அங்கே கோரமான காட்சிகளைக் கண்டுள்ளனர். குழந்தைகள் உட்பட ஜவர் இரத்த வெள்ளத்தில் சடலங்களாகக் காணப்பட்டுள்ளனர்.
 
தாக்குதல் நடத்திய நபரும் கோமா நிலையில் மீட்கப்பட்டார் எனத் தெரிகிறது. அவருக்கு அருகே, கத்தி, சுத்தியல் என்பன காணப்பட்டுள்ளன.
 
தேசிய மற்றும் நகரப் பொலீஸாரால் சம்பவம் நடந்த பகுதி உடனடியாக மூடப்பட்டு வெளியாட்கள் செல்வது தடுக்கப்பட்டுள்ளது. பஸ் மற்றும் வாகனப் போக்குவரத்துகள் மாற்று வழிகளில் திசை திருப்பப் பட்டுள்ளன.
 
மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies