ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து உயிர் துறந்த தியாக தீபம் திலீபனின் 33 ஆவது ஆண்டு நினைவேந்தல் நாள் இன்றாகும்.
ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து உயிர் துறந்த தியாக தீபம் திலீபனின் 33 ஆவது ஆண்டு நினைவேந்தல் நாள் இன்றாகும்.
மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும்.
தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.
ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் 15ஆம் திகதி நல்லூர் ஆலய முன்றலில், தியாகி திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். தொடர்ந்து 12 நாட்களாக நீராகாரமும் இன்றி போராட்டத்தை முன்னெடுத்த அவர், செப்ரெம்பர் 26ஆம் திகதி காலை உயிர்துறந்தார்.
திலீபனின் தியாகத்தை நினைவேந்தல் செய்யும் வகையில் தமிழ் மக்கள் 12 நாட்களையும் நினைவு நாட்களாக அனுசரித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு வடக்கு, கிழக்கில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு அரசாங்கம் பொலிசாரின் மூலமாக நீதிமன்றக் கட்டளைகளைப் பெற்று தடை விதித்துள்ளனர்.எனினும் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் தமிழ் மக்கள் உணர்வு ரீதியாக இந்த நினைவுகூரலில் ஒன்றுபட்டுள்ளனர்.
செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் இன்று நடத்தப்படவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அந்த கட்டளையை மீறாத வகையில் திட்டமிட்டபடி இன்று போராட்டம் நடைபெறும் என தமிழ் தேசியக் கட்சிகள் தெரிவித்துள்ளன.
செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் இன்று நடத்தப்படவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அந்த கட்டளையை மீறாத வகையில் திட்டமிட்டபடி இன்று போராட்டம் நடைபெறும் என தமிழ் தேசியக் கட்சிகள் தெரிவித்துள்ளன.
பருத்தித்துறை நீதிமன்றம் நேற்று பிறப்பித்த தடைஉத்தரவை அடுத்து, தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் நேற்று மாலை ஒன்று கூடி ஆராய்ந்தனர். இந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் பேசிய சட்டத்தரணி என்.சிறிகாந்தா,
“தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் தியாகி திலீபனின் நினைவுகூரலுக்கான உரிமை ஆகியவற்றை வலியுறுத்தி தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவதற்கு தீர்மானித்திருந்தோம்.
வல்வெட்டித்துறை பொலிஸார் பருத்தித்துறை நீதிமன்றில் விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பித்து தடைக்கட்டளை ஒன்றைப் பெற்றிருக்கின்றனர். கொரோனா ஆபத்தைச் சுட்டிக்காட்டி பொலிஸார் வழங்கிய விண்ணப்பத்தினை ஏற்று நீதிமன்றம் இந்தக் கட்டளையை வழங்கியிருக்கிறது.
இந்தத் தடைக் கட்டளையில் பிரதிவாதிகளாக எவருடைய பெயரும் குறிப்பிடப்படாத போதும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கே தடைக்கட்டளை வழங்கப்பட்டிருக்கின்றது. எனவே அதனை உரிய மரியாதையுடன் கவனத்தில் கொள்கிறோம்.
இதையடுத்து, திட்டமிட்டபடி போராட்டத்தை எங்கு நடத்துவதென்பது தொடர்பாக ஒரு திட்டவட்டமான தீர்மானத்தை நாம் எடுத்துள்ளோம்.
நீதிமன்றக் கட்டளையை மீறாத வகையில் அதற்கான மரியாதைகளுடன் திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும். சுகாதார நடைமுறைகள் மிக இறுக்கமாகப் பின்பற்றப்பட்டு போராட்டம் நடத்தப்படும்.
அத்துடன், ஏற்கனவே அறிவித்திருந்தது போல 28ஆம் திகதி வடக்கு கிழக்குத் தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.