தியாகி திலீபன் நினைவேந்தலை தடுத்த பொலிஸ்- மீறிய சிவாஜிலிங்கம் கைது!
15 Sep,2020
நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படம் மற்றும் பதாதைகள் நேற்று இரவோடிரவாக பொலிசாரால் அகற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த விடாமல் தடுக்கப்பட்டுள்ளது.
நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படம் மற்றும் பதாதைகள் நேற்று இரவோடிரவாக பொலிசாரால் அகற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த விடாமல் தடுக்கப்பட்டுள்ளது.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இன்று ஆரம்பமாக இருந்த நிலையில், நிகழ்வுகளுக்கு நேற்றைய தினம் நீதி மன்றம் தடை விதித்திருந்தது.
இதனையடுத்து நேற்று மாலை முதல் நல்லூரிலும் யாழ். பல்கலைக்கழகத்திலும் இருந்த திலீபனின் திருவுருவ படங்கள், பதாகைகள், கொடிகள் என்பன அகற்றப்பட்டு பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
அத்துடன், அவ்விடங்களுக்கு யாரும் சென்று வருவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், அங்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடக்வியலாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு பொலிஸிரால் திருப்பி அனுப்பப்பட்டனர்.
அதேவேளை, நீதிமன்ற தடையை மீறி தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டித்தார் என்ற குற்றச்சாட்டில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தடைகளை மீறி எம்.கே.சிவாஜிலிங்கம் இன்றைய தினம் காலை கோண்டாவில் பகுதியில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இதனையடுத்து அவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.