உலகத் தமிழர் அனைவரும் விக்கி ஐயா பின்னால் ஒன்றாக திரண்டுள்ளார்கள்: ஒரே பார்வை
03 Sep,2020
சமீபத்தில் விக்கினேஸ்வரன் ஐயா அவர்கள், சிங்கள தொலைக்காட்சிக்கு கொடுத்த அடியில் இருந்து இன்னும் சிங்களவர் மீண்டும் வரவில்லை. சரளமாக சிங்களம் பேசவல்ல ஐயா அவர்கள், எதனையும் எழுதி வைத்து வாசிக்காமல். சிங்கள ஊடகவியலாளர் கேட்ட கேள்வி அனைத்திற்கும் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். அது போக விடுதலைப் புலிகளையும், தமிழர்கள் போராட்டத்தையும் அவர் இறுதிவரை விட்டுக் கொடுக்கவில்லை. இந்த துணிவை, பல உலகத் தமிழர்கள் மெச்சி கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
எனக்கு சாவின் மேல் பயம் இல்லை !
நான் வாழ்ந்து முடித்தவன்ஸ !
இனியும் தமிழனுக்காக தான் வாழ்ந்து மடிவேன் !
என்று விக்கி ஐயா கூறியுள்ள வாசகங்கள் இணையத்தை கலக்கும் செய்தியாக வைரலாக பரவி வருகிறது. கனடா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல தமிழர்கள் தற்போது விக்கி ஐயாவின் பக்கம் இணைந்து செயல்பட ஆரம்பித்துள்ளதோடு. அவர் கரங்களை பலப்படுத்தவும் முனைப்பு காட்டி வருகிறார்கள். விக்கி ஐயாவின் கட்சி, ஐரோப்பிய நாடுகளுக்கும் விரிவு படுத்தப்பட உள்ளதோடு.
புலம்பெயர் நாட்டில் உள்ள பல லட்சம் தமிழர்கள், தற்போது விக்கி ஐயாவை ஒரு அரசியல் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பது, அவர்கள் சமூக வலையத்தளங்களில் போடும் பதிவுகள் ஊடாக உணர முடிவதாக பலர் தெரிவித்துள்ளார்கள். விக்கி ஐயாவின் விடாப் பிடி போக்கும், துணிவும் , ஆழுமையும் தமிழர்களை மீண்டும் வீறு கொள்ள வைத்துள்ளது என்றால் அது மிகையாகாது.
எனவே உலகத் தமிழர்கள் அனைவரும் விக்கி ஐயாவின் கரங்களை பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. சரியான தலைமை ஒன்றை உருவாக்க, தமிழர்கள் ஒன்றினைய வேண்டி அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.