யாழ்ப்பாணத்தில் முக்கிய சந்திகளில் சி.சி.ரி.வி கமெராக்கள்
26 Aug,2020
யாழ்ப்பாணம் மாநகர சபை நல்லூர் மற்றும் கோப்பாய் பிரதேசங்களில் உள்ள முக்கியமான சந்திகளில் முதற்கட்டமாக 14 சி.சி.ரி.வி கமெராக்களை பொருத்தவுள்ளதாக யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தலைமையில் இடம்பெற்றது. இதில் வீதிபோக்குவரத்து விபத்துக்களை குறைப்பதற்கான நடவடிக்கை தொடர்பாக கலந்துரையாடப்பட்ட போது மாநகர முதல்வர் இவ்வாறு குறிப்பிட்டார். அண்மைய காலப்பகுதியில் யாழ்ப்பாண குடாநாட்டின் முக்கிய சந்திகளில் வீதிப்போக்குவரத்து ஊடாக விபத்துக்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அது சம்பந்தமான விடயங்களில் வீதிப்போக்குவரத்து பொலிஸாரின் பணிப்பின் பெயரில் சி.சி.ரி.வி கமெராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சி.சி.ரி.வி கமெராக்களை பொருத்துவதற்கான நடவடிக்கை தொடர்பில் மாநகர சபை உறுப்பினர்களின் ஒத்துழைப்பு எவ்வாறு இருக்கின்றது என, யாழ். மாநகர சபை முதல்வரால் வினவப்பட்டது. அதற்காக உறுப்பினர்களின் பிரதிவாதங்களுடன் தீர்மானம் சபையில் எகமானதாக நிறைவேற்றப்பட்டது.