ஸ்ரீலங்காவில் நடந்து முடிந்த 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் 25 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை தமிழரசு கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளின் சார்பில் இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அங்கஜன் ராமநாதன், இலங்கை தமிழரசு கட்சி சிவஞானம் சிறிதரன்,எம்.ஏ. சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈழமக்கள் ஜனநாயக கட்சி டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சீ.வி. விக்னேஸ்வரன்.
திருகோணமலை.
இலங்கை தமிழரசு கட்சி இரா.சம்பந்தன்.
வன்னி
இலங்கை தமிழரசு கட்சி சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், எஸ். ஜெயராஜலிங்கம், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் குலசிங்கம் திலீபன்,
மட்டக்களப்பு.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), இலங்கை தமிழரசு கட்சி சாணாக்கிய ராகுல், கோவிந்தன் கருணாகரன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எஸ். வியாழேந்திரன்,
கொழும்பு
ஐக்கிய மக்கள் சக்தி மனோ கணேசன்.
கண்டி
ஐக்கிய மக்கள் சக்தி வேலு குமார்
நுவரெலியா
ஐக்கிய மக்கள் சக்தி பழனி திகம்பரம், வேலுச்சாமி ராதாகிருஷ்ணன், எம். உதயகுமார், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜீவன் தொண்டமான், மருதபாண்டி ராமேஸ்வரன்.
பதுளை
ஐக்கிய மக்கள் சக்தி வடிவேல் சுரேஷ், அரவிந்தகுமார் ஆகியோர் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மக்களால் நேரடியாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களாவர்.