இலங்கையில் இனி மன்னர் ஆட்சிதான்? தமிழர்களின் நிலை;
06 Aug,2020
மன்னர் ஆட்சி போல் இலங்கையில் மஹிந்த குடும்பத்தின் ஆட்சி தொடரப்போகிறது என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய தென்னிலங்கையை சேர்ந்த பெரும்பான்மை இனத்தவரின் வாக்குகளிலேயே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார், அந்த வகையில் தற்போது நடைபெற்றுள்ள பாராளுமன்ற தேர்தலிலும் தென்னிலங்கை மக்களின் ஆதரவுடன் பெரும்பான்மையை பெறக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் பலமான எதிர்க்கட்சிகளும் இல்லாத நிலையில் இனிவரும் காலங்களில் தொடர்ந்து மஹிந்த மன்னர் ஆட்சிதான் இடம்பெறப்போகின்றது.
தமிழர்களை கடவுள்தான் காப்பாத்தணும்..
பிரதமர் உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினர் வாக்குகளை பதிவு செய்த விதம் (காணொளி)
பிரதமர் மகிந்த ராஜபக்ச முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் அம்பாந்தோட்ட மெதமுலன டீ ஏ ராஜபக்ச வித்தியாலயத்தில் இன்று முற்பகல் தங்களது வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.அவர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்த விதம் இவ்வாறு அமைந்திருந்தது.
பல்வேறு மதவழிபாடுகளை தொடர்ந்து அவர்கள் வாக்குகளை பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.