அந்த பிரேதப்பெட்டிகள் மலர்சாலையின் மேல் மாடியில் காணப்படுகின்றன, அதற்குள் நான்குமாதத்திற்கு முன்னர் டோஹா கட்டாரில் படுகொலை செய்யப்பட்ட மூவரின் உடல்கள் காணப்படுகின்றன.
சில நாட்களிற்கு முன்னரே அந்த உடல்கள் டோஹாவிலிருந்து எடுத்துவரப்பட்டன.
மார்ச் முதலாம் திகதி தொடர்மாடியொன்றில் இரண்டாம் தளத்தில் இந்த ஈவிரக்கமற்ற கொலைகள் இடம்பெற்றுள்ளன
எனினும் நான்கு நாட்களின் பின்னரேபொலிஸார் உடல்களை மீட்டுள்ளனர்.
கதவை உடைத்துகொண்டு சென்ற ஆண் ஒருவரினதும் இரண்டு பெண்களினதும், மோசமாக சிதைவடைந்த நிலையில் காணப்பட்ட உடல்களை கண்டுள்ளனர்.
தந்தை தாய் மகள் ஆகியோரே திட்டமிட்ட முறையில் கொல்லப்பட்டுள்ளனர்.
பின்னர் இடம்பெற்ற பிரேதப்பரிசோதனையின் போது கொலையாளி மூவரினதும் கழுத்தையும் கூரிய ஆயுதத்தினால் துண்டித்தது தெரியவந்துள்ளது.
கொல்லப்பட்டவர்களின் உடல்களில் அவர்கள் எதிர்த்து போராடியமைக்கான தடயங்கள் எதுவும் காணப்படவில்லை என விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொலையாளி கொல்லப்பட்டவர்களுக்கு முதலில் மயக்கமருந்தினை கொடுத்த பின்னரே கொலை செய்திருக்கலாம் என கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
லோகதாசன் மகேந்திராஜ்(58)சவரிமுத்து விக்டோரியா ,சுதர்சினி மகேந்திராஜ் ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் பத்து வருடத்திற்கு முன்னரே டோஹா கட்டாரிற்கு சென்றுள்ளனர்.
இந்த கொலை நடந்து ஆறு நாட்களின் பின்னரே இலங்கையில் அவர்களது குடும்பத்தவர்களுக்கு இந்த துயர சம்பவம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
கொலைசெய்யப்பட்ட சுதர்சினியின் நண்பியொருவரே இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
சுதர்சினியும் தானும் ஒரே கடையில் வேலைபார்ப்பதாகவும் சுதர்சினி வேலைக்கு வராததை தொடர்ந்து அவரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.
மறுநாள் மீண்டும் நான் அவரை தொடர்கொள்ள முயன்றவேளை ஆண்ஒருவர் பேசினார், அவர் சுதர்சினியின் தந்தை வழுக்கிவிழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தார் என சுதர்சினியின் நண்பி தெரிவித்துள்ளார்.
சுதர்சினியும் அவரது தாயாரும் தந்தையுடன் மருத்துவமனையில் உள்ளனர் நான் அவர்களின் கையடக்கதொலைபேசியை வைத்திருக்கின்றேன் என அந்த நபர் தெரிவித்துள்ளார்.
தொலைபேசியில் உரையாடியவர் சுதர்சினி குடும்பத்தினருக்கு நன்கு தெரிந்த டாக்சி ஓட்டுநர் குடும்ப நண்;பர் என்பதால் நான் அவர் சொல்வதை நம்பினேன் என சுதர்சினியின் நண்பி தெரிவித்துள்ளார்.
எனினும் மறுநாள் மீணடும் சுதர்சினியை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றவேளை அது சாத்தியமாகவில்லை அதனை தொடர்ந்து நான் காவல்துறையினரை தொடர்கொண்டேன் என அவர் தெரிவித்துள்ளா
.தமிழ் குடும்பத்தினரை கொலை செய்த பின்னர் இலங்கைக்கு தப்பிவந்துள்ளார் என சந்தேகிக்கப்படும் டாக்சி ஓட்டுநர் குறித்து தற்போது கவனம் திரும்பியுள்ளது.
இலங்கை கொரோனா வைரஸ் காரணமாக கொழும்புவிமானநிலையத்தை மூடுவதற்கு முன்னர் இவர் இலங்கைக்குள் வந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சந்தேகநபரின் முகவரி குறித்த விபரங்கள் எதுவுமில்லை அவர் கண்டியை சேர்ந்தவர் என்ற சந்தேகம் காணப்படுகின்றது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் குறித்த நபர் தொடர்பில் சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ளனர்.
குறிப்பிட்ட நபர் 2018 இல் டோஹாவுக்கு சென்றுள்ளார்,அதன் பின்னர் அவர் கொலை செய்யப்பட்ட குடும்பத்தினருக்கு டாக்சி சேவையை வழங்கியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
டாக்சி சாரதி சுதர்சினியை திருமணம் செய்வதற்கு விருப்பம் வெளியிட்டிருந்தார்,
ஆனால் அவர் ஏற்கனவே திருமணமானவர்,பிள்ளையொன்று உள்ளது என்பது தெரியவந்ததும் நாங்கள் அவரை திருமண எண்ணத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டோம்என கொலைசெய்யப்பட்டவர்களின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னரே அவர் அந்த குடும்பத்தை கொலை செய்துள்ளார் என்ற சந்தேகம் காணப்படுகின்றது.