கோத்தாபய அரசு எமது அபிலாஷைகளை நிறைவேற்றினால் ஆதரவு வழங்குவோம்
11 Jun,2020
தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வினை கோத்தாபய அரசு முன்வைக்கும் போது அது எங்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதாக இருந்தால் நிச்சயமாக அதற்கு ஆதரவைக் கொடுப்போம் எனத் தெரிவித்துள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அரசாங்கத்திற்கான ஆதரவு அல்ல அந்தச் செயற்றிட்டம் நிறைவேறுவதற்கான எங்களின் ஆதரவே எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் யாழ்.அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலளாளர் சந்திப்பின்போதே அவர்இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
சவால்கள் கூடியதாகவும் எதிர்ப்பு என்கின்ற விடையம் மீள மீள முன்வைக்கின்ற காரணம் கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் எடுத்த நடவடிக்கைகள் புதிய ஆட்சி எப்படியாக இருக்கப்போகின்றது என்பது நல்ல உதாரணங்கள். இப்போதே எமக்குக் கிடைத்திருக்கின்றன.
சில செயலணிகள் உருவாக்கப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி செயலணி கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் சம்பந்தமாக செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக வாழ்கின்ற மக்கள் தமிழ்பேசும் மக்கள். தமிழ்பேசும் முஸ்லிம் மக்கள் அந்தச் செயலணியில் இல்லை. அகழ்வாராய்ச்சிக்கு பெயர் போனவர் என்று கூறக்கூடிய எல்லாவள தேரர் அதில் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருடைய ஆராய்ச்சி முழுவதும் இந்தப் பிரதேசங்கள் அனைத்தும் பௌத்த சின்னங்கள் இருக்கின்ற பிரதேசங்கள் அந்த மேன்மையை தொடர்ந்து பேணவேண்டும் என்று வாதாடுகின்றவர்.
அத்தோடு இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அனைவரும் சிங்களவர்களாக இருக்கின்றார்கள். நேற்றைய தினம் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளாராம்.
தமிழ் முஸ்லிம் ஒருவரையும் இந்த செயலணியில் நியமிக்கவில்லை நியமியுங்கள் என்று எழுதியுள்ளார்.
அவர் இதன்மூலம் என்னசொல்ல வருகின்றார் என்றால் எங்களைப்போன்றவர்கள் விசுவாசமானவர்கள் உங்களுடன் இருக்கின்றோம்.
ஏன் எங்களில் உங்களுக்கு விசுவாசம் இல்லாமல் போனது நீங்கள் சொல்வதைத்தான் நாங்கள் செய்வோம். எங்களில் ஒருவரை நியமியக்கவேண்டும் என்ற தொனியிலேயே அந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அக் கடிதத்தில் எந்தப் பயனும் கிடையாது.
பாதுகாப்பு செயலாளர் தலைமையில் நாட்டின் ஒழுக்கத்தைப் போணுவதற்காக இன்னுமொரு செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஒழுக்கத்தைப் பேணுவதற்கு பாடசாலைகள் மதஸ்தாபனங்கள் அல்ல இராணுவம் மக்களிடத்தில் ஒழுக்கத்தை கொண்டு வரப்போகின்றதா? இதற்காக ஒரு செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.
பல அமைச்சின் செயலாளர் பொறுப்புக்கள் இளைப்பாறிய இராணுவ அதிகாரிகளை நியமித்துள்ளார்கள் இவ்வாறாக இராணுவ மயமாக்கல் என்பது மிகத் தீவிரமாக நடைபெற்றுவ ருகின்றது.
இந்தச்சூழ்நிலையில் பாராளுமன்ற ஜனநாயகம் ஒடுக்கப்படுகின்றது. பிரதிநிதித்துவ ஜனநாயகம் இல்லாது விட்டால் இவர்கள் ஒருவருக்கும் பதில் சொல்லாத நிலை பொறுப்புக்கூறத்தேவையில்லாத நிலை என்ற ஆபத்துக்கள் இந்த நாட்டில் ஏற்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,
கேள்வி : தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எடுக்கத் தவறும் பட்சத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குமா?
அரசாங்கத்திற்கு ஆதரவு என நான் கூறமாட்டேன் நாங்களாக அரசாங்கத்தை ஏற்படுத்திய போதும் கூட அரசாங்கத்துடன் இணைந்து ஆதரவு அளிக்கவில்லை.
ஆனால் எங்களுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தமாக நீண்டதூரம் பயணித்திருக்கின்றோம். ஒரு நகல் வரைபு எற்படுத்தப்பட்டிருக்கின்றது.
அத்தகைய சூழலில் அதனை நிறைவுக்குக் கொண்டு வருவதற்கு அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்பட்டால் அந்தத் தீர்வு எங்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதாக இருந்தால் நிச்சயமாக அதற்கு ஆதரவைக் கொடுப்போம்.
ஜனாதிபதி ஜனவரி மூன்றம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது நான் பாராளுமன்றத்தில் உரையாற்றிபோது இது தொடர்பில் உரையாற்றினேன்.
ஜனாதிபதியும் புதிய அரசியல் அமைப்பு உருவாக்குவோம் என்று கூறினார் நாங்கள் புதிய அரசியல் அமைப்பு தயாரிக்கின்றபோது குறித்த மூன்று விடையங்களை தன்னுடைய உரையில் கூறியிருந்தார் ஆகையினால் மறுபடியும் முதலில்இருந்து ஆரம்பிக்கவேண்டிய தேவையில்லை ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட நகலை வைத்தே தேவையான மாற்றங்களை செய்து அதனை முடிவுக்குக் கொண்டு வரலாம் என்று ஏற்கனவே கூறியுள்ளோம். கூட்டமைப்பு தலைவரும் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் எடுத்துரைத்துள்ளார்.
அண்மையில் பிரதமரை சந்தித்தபோது அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் மீளவும் நினைவுபடுத்தியுள்ளேன்.
குறிப்பாக மூன்றில்இரண்டு பெரும்பான்மை இல்லாது போகும் நீங்கள் இதய சுத்தியுடன் புதிய அரசியல் அமைப்பைக் கொண்டு வரும்போது அது ஜனநாயக அடிப்படையிலான தீர்வாக இருக்கவேண்டும்.
அதில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் பூர்த்திசெய்யக்கூடிய வகையில் ஏற்பாடுகள் இருக்கமேயானால் அதனை வரைவதற்கும் நிறைவேற்றுவதற்கும் பூரணமான ஆதவைக்கொடுப்போம் அரசாங்கத்தின்றகான ஆதரவு அல்ல அந்தச் செயற்றிட்டம் நிறைவேறுவதற்கு எங்களின் அதரவைக் கொடுப்போம்.
கேள்வி : அரசியல் கைதிகளின் பெயர் விபரங்கள் பிரதமரிடம் வழங்கப்பட்டள்ளமை தொடர்பில் அதன் அடுத்த கட்ட நிலவரங்கள் என்ன?
குறித்த விபரங்கள் பிரதமரிடம் வழங்கி வைத்தேன் நாம் வழங்கிய விவரங்கள் நீதி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது இவற்றை வழங்கிய பத்து நாட்களுக்குள் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் நீதி அமைச்சர் நிமால் சிறிபால சில்வா கூறியதாக ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
96 பேரில் 84 பேரைத் தெரிவு செய்து சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் சட்டமா அதிபரின் சிபார்சு வந்தவுடன் இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
தேர்தல் காலத்தில் எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்று கூறமுடியாது ஆனாலும் இந்த விடையத்தில் கூடிய விரைவில் இதனை நிறைவேற்றுவதற்கு எல்லா முயற்சிகளையும் எடுப்போம்.