1,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிங்கப்பூரில் தவிப்பு - அரசு உதவ வேண்டுமென வேண்டுகோள்
30 May,2020
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிங்கப்பூருக்கு வேலை தேடி சென்றவர்கள் மற்றும் அவர்களது குடும்பம், சிங்கப்பூரில் எஸ்.பாஸ், குடியுரிமை பெற்றுள்ள உறவினர்களைச் சந்திக்க சென்றவர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் கொரோனா பொது முடக்கத்தால் நாடு திரும்ப முடியாமல் சிங்கப்பூரில் 2 மாதமாக தவித்து வருகின்றனர்.
சில முதியோர்கள் மருத்துவ வசதியின்றியும் தவித்து வருகின்றனர். மருத்துவ வசதி கிடைக்கும் சிலருக்கு செலவு அதிககமாகிறது என்கிறார்கள். இது குறித்து சிங்கப்பூரில் உள்ள திருவாரூர் மாவட்டம் வடுவூரைச் சேர்ந்த திலகராமன், தமிழ் உதயா ஆகியோர் கூறுகையில்,
சிங்கப்பூரில் பணிபுரிவோருக்கு மட்டும் அந்தந்த நிறுவனங்கள் பொறுப்பேற்று உதவி வருகின்றன.ஆனால், பணிக்காலம் முடிந்தவர்கள், வேலையிழந்தவர்களுக்கு எந்தவித உதவியும் கிடைக்கவில்லை. ஏற்கனவே பெற்ற ஊதியத்தை உணவிற்காக செலவளித்து விட்டோம். அதேபோல் 30-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் பிரசவத்திற்கு தமிழ்நாட்டுக்கு வர திட்டமிட்டிருந்தனர்.
தமிழகத்தில் 20,000 ஐ கடந்த கொரோனா பாதிப்பு: இன்று அதிகபட்சமாக 874 பேர் பாதிப்பு
பிரசவ தேதி நெருங்கி விட்ட நிலையில் போதிய மருத்துவ வசதியின்றி, விமான போக்குவரத்தின்றியும் முடங்கியுள்ளனர். எனவே தமிழ்நாடு அரசு தங்களை அழைத்து வர உதவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.மேலும்கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் சென்னைக்கு விமானம் வர வாய்ப்பில்லை என்றாலும் திருச்சி அழைத்து வர கோரிக்கை விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பான்மையானவர்கள் டெல்டா & தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.