தமிழகத்தில் நேற்று கண்டறியப்பட்ட 52 தொற்றுகளில் 47 தொற்று சென்னையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மிக கொரோனா மிக தீவிரமாகியுள்ளது. மேலும் 6 மண்டலங்கள் ஆபத்தானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று உறுதி செய்யப்பட்ட 52 தொற்றுகளில் 47 தொற்று சென்னையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இதுவரை மொத்தம் பாதித்துள்ள 570 நபர்களில், 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், குணமடைந்து உள்ளவர்கள் எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளது.
மண்டலம் வாரியாக பார்க்கையில், அதிகபட்சமாக ராயபுரத்தில் 158 பேரும், திரு.வி.க நகரில் 94 பேரும், தன்டையார்ப்பேட்டையில் 66 பேரும், தேனாம்பேட்டையில் 56 பேரும், கோடம்பாக்கத்தில் 54 பேரும், அண்ணாநகரில் 53 பேரும் உள்ளனர். மேலும், வளசரவாக்கத்தில் 17 பேரும், அடையாறில் 17 பேரும், திருவொற்றியூரில் 15 பேரும், அம்பத்தூரில் 15 நபரும், ஆலந்தூரில் 9 பேரும், பெருங்குடியில் 9 பேரும், மாதவரத்தில் 3 பேரும், சோழிங்கநல்லூரில் 2 பேரும், மணலியில் 1 நபரும் உள்ளனர்.
ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய 6 மண்டலங்களில் கொரோனா பரவல் மிக அதிகமாக உள்ளது.
கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி வரை ஒரு தொற்று கூட இல்லாமல் இருந்த அம்பத்தூர் மண்டலத்தில், நேற்று முன்தினம் வரை இரண்டு தொற்று இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 13 தொற்று அதிகரித்து உள்ளது.மண்டலம் வாரியாக மொத்தம் உயிரிழந்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்கள்:
திருவொற்றியூர் - 15 - 0 - 4
மணலி - 1 - 0 - 0
மாதவரம் - 3 - 0 - 3
தண்டையார்பேட்டை - 66 - 1 - 15
ராயபுரம் - 158 - 5 - 43
திருவிக நகர் - 94 - 3 - 26
அம்பத்தூர் - 15 - 0 - 0
அண்ணாநகர் - 53 - 3 - 18
தேனாம்பேட்டை - 56 - 0 - 20
கோடம்பாக்கம் - 54 - 0 - 19
வளசரவாக்கம் - 17 - 0 - 6
ஆலந்தூர் - 9 - 0 - 4
அடையார் - 17 - 0 - 6
பெருங்குடி - 9 - 0 - 7
சோழிங்கநல்லூர் - 2 - 0 - 2
சென்னையில் ஆண்கள் 64.32% பேரும், பெண்கள் 35.68% பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். வயது வாரியாக பார்க்கையில், அதிகபட்சமாக 20 முதல் 29 வயது வரை உள்ள நபர்களில் 123 பேருக்கும், 30 முதல் 39 வயது வரை உள்ள நபர்கள் 120 பேருக்கும், தொற்று உள்ளது. குறைந்தபட்சமாக 80 வயதுக்கு மேல் 9 பேரும், 9 வயதுக்கு கீழ் 13 பேரும் பாதித்து உள்ளனர். 10 முதல் 19 வயதுள்ளோர் 46 பேருக்கும், 40 முதல் 49 வயதுள்ளோர் 103 பேருக்கும், 50 முதல் 59 வயதுள்ளோர் 83 பேருக்கும், 60 முதல் 69 வயதுள்ளோர் 52 பேருக்கும், 70 முதல் 79 வயதுள்ளோர் 20 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
வயது வாரியாக பாதித்தோர் எண்ணிக்கை:
0-9 = 13
10-19 = 46
20-29 = 123
30-39 = 120
40-49 = 103
50-59 = 83
60-69 = 52
70-79 = 20
80 = 9
சென்னையில் நோய்த் தொற்று பரவலை தடுக்க மாநகராட்சி சார்பில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 168 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.இருந்தும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிப்புகளை குறைக்க வீடு வீடாக மேற்கொள்ளும் அறிகுறிகள் பரிசோதனையை மேலும் தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.