லண்டனில் அசேலம் அடித்தவர்களுக்கு பெரும் நண்மை: Rejected என்றாலும் காசு கிடைக்கும் !
27 Apr,2020
பிரித்தானியாவில் அகதிகளாக இருக்கும் நபர், அகதி அந்தஸ்த்து நிராகரித்ததால் ஒளிந்து திரியும் நபர்கள் மற்றும் முதல் கட்டமாக நிராகரித்து 2ம் கட்டத்திற்காக வழக்கை தொடுக்க காத்திருக்கும் அனைவருக்கும், பிரித்தானிய அரசு வாழ்வாதாரத்திற்கு தேவையான பணத்தை கொடுக்கிறது. மேலும் 2ம் நிலை வழக்குகள் மறு அறிவித்தல் வரும் வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது போக சிலர் பொலிஸ் நிலையம் சென்று கையெழுத்து போடவேண்டி இருக்கும் அல்லவா. அவர்கள் அப்படி செய்ய இனி தேவை இல்லை.
நஷனல் அசேலம் சீக்கர் சர்விஸ்(NASS) ஊடாக , நீங்கள் தொடர்பு கொண்டு , உங்களுக்கான உதவித் தொகைகளை பெற்றுக் கொள்ளலாம். இது போக உங்கள் வழக்குகள் அனைத்தும் தாமாகவே(Automatic) பிற்போடப்பட்டுள்ளதால். நீங்கள் எந்த ஒரு பணத்தையும் உங்கள் சொலி சிட்டருக்கு கொடுக்க தேவை இல்லை.
சில காசு பிடுங்கி சொலிசிட்டர்மார்கள், தாம் -தான் போன் செய்து, வழக்கை பிற்போட்டோம் என்று கூறி, தமிழர்களிடம் பணத்தை பெற்று வருகிறார்கள். ஆனால் இந்த நிலுவையில் உள்ள வழக்குகள், தாமாகவே பிற்போடப்பட்டு வருகிறது. எனவே நீங்கள் எந்த பணத்தையும் கட்ட வேண்டிய அவசியம் இல்லை.
இது போக ரூரிஸ் விசாவில் லண்டன் வந்து பல வருடங்களாக மறைந்து வாழ்ந்து வரும் நபர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அணுகினால், பால் பாண் போன்ற உணவு வகைகளை இலவசமாக அவர்கள் கொடுப்பார்கள். இந்த ஏற்பாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிரித்தானிய அரசு ஏற்படுத்தியுள்ள மாறுதல்களே.