கோட்டா செல்வாக்கை இழந்து மண் கவ்வும் நேரம் வந்துவிட்டதா ?
27 Apr,2020
இலங்கையில் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்தில் தேர்தலை நடத்த முடியவில்லை. தனது பெயரும் செல்வாக்கும் உச்சத்தில் இருக்கும் ஒரு கால கட்டத்திலேயே தேர்தலை எப்படியாவது நடத்திவிடவேண்டும் என்று கோட்டபாய பெரும் கணக்கு போட்டு வைத்திருந்தார். கொரோனா தொற்று காணப்பட்ட போதிலும், அது இலங்கையில் குறைவாக உள்ளது போலவும். அது மெல்ல மெல்ல கட்டுப்பாட்டினுள் வருவது போன்ற ஒரு தோற்றப்பட்டு இருந்து வந்தது. இதனால் கோட்டாவுக்கு ஒரு நல்ல பெயரும் உதயமாகி இருந்தது. ஆனால் அது நெடு நாள் நீடிக்கவில்லை. திடீரென கொரோனா தொற்று பன்மடங்காக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று முன் எப்பொழுதும் இல்லாதவாறு வேகமாக பரவ ஆரம்பித்துவிட்டது. இங்கே தான் கோட்டபாயவின் சகல கணக்குகளும் சறுக்கி மண் கவ்வியுள்ளது எனலாம். இனி என்ன நடக்க இருக்கிறது என்பதனை நாம் சற்று பார்த்தால், கோட்டாவின் நிலைமை என்ன ஆகப் போகிறது என்று புரிந்துவிடும். இலங்கையில் மெல்ல மெல்ல கொரோனா தாக்கம் அதிகரிக்க, நாட்டில் ஊரடங்கு அறிவிக்கப்படும். இலங்கை பொருளாதாரம் வீழ்ச்சியடையும். மக்களின் சாவு எண்ணிக்கை அதிகரிக்க, இதனை தடுக்க கோட்டா தவறிவிட்டதாக செய்திகள் உலவ தொடங்கும். வைத்தியசாலைகளில் நோயாளிகள் சரியாக கையாளப்படவில்லை என்ற குற்றச்சாட்டை, கோட்டபாயவே ஏற்க வேண்டி இருக்கும். காரணம் சுகாதார அமைச்சரே பதவியில் இல்லை.
இதுபோக வேலையில்லா திண்டாட்டம், உணவுப் பற்றாக்குறை. என்று பல பிரச்சனைகளை இலங்கை எதிர்நோக்க உள்ளது. அங்கே நடக்கும் அனைத்து மோசமான விடையங்களுக்கும் கோட்டபாய என்னும் தனி நபரே பதில் சொல்லி ஆகவேண்டிய சூழ் நிலை உருவாகும். கொரோனா தொற்று, 2 விதமான பின் விளைவுகளை ஏற்படுத்தும். ஒன்று, ஜேர்மனி போல அதன் அரச அதிபர் மிக நன்றாக கையாண்டார் என்று கூறுவார்கள். இல்லை என்றால் அரச தலைவரை மண் வாரி தூற்றுவார்கள்.
இதில் என்ன நடக்கப் போகிறது என்பதனை தமிழர்கள் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். ஏன் எனில் அமெரிக்காவில் டொனால் ரம் எப்படி நாறுகிறார் என்று நாம் கண் கூடாகப் பார்கிறோம். அடுத்த தேர்தலில் அவர் போட்டி இட்டால், டெபாசிட் பணம் கூட கிடைக்காமல் தோல்வியை தழுவுவார். அதுபோல தான் இலங்கையிலும் ஒரு பெரிய மாற்றம் ஒன்றை எதிர்பார்க்க முடியும் என ஆய்வாளர் ஒருவர் எதிர்வு கூறியுள்ளார்.