மேலும் ஒரு ஈழத் தமிழர் லண்டனில் உயிரிழந்துள்ளார்.பிரித்தானியா முழுவதுமான லாக் டவுன் அடுத்த மாதம் 7ம்
14 Apr,2020
சற்றுமுன் மேலும் ஒரு ஈழத் தமிழர் லண்டனில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார், யாழ் கச்சாய் வீதி சாகவச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட அனந்தன் சிதம்பரநாதன் என்பவரே இன்று இறந்துள்ளார். இவர் லண்டன் குவீன்ஸ் பெரியில் வாழ்ந்து வந்த நிலையில், கொடிய கொரோனா தொற்றால் இறந்துள்ளார். அனந்தனின் ஆத்ம சாந்திக்கு அனைவரும் பிரார்த்திப்போமாக .
லண்டன் லாக் டவுன் மே மாதம் 7ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு !
பிரித்தானியா முழுவதுமான லாக் டவுன் அடுத்த மாதம் 7ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சற்று முன்னரே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் டொமினிக் ரப். கடந்த 2 தினங்களில் மட்டுமே சாவு எண்ணிக்கை வீழ்ச்சி கண்டுள்ளது. இன் நிலையில் வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ரப் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். கொரோனா நோயாளர்களின் தொற்று கணிசமான எண்ணிக்கையில், குறைய ஆரம்பிக்கும் வரை, லாக் டவுன் தொடரும் என்பது உறுதியாகியுள்ளது.