ஏண்டா இங்க கொண்டு வாறீங்கள் கொரோனா காரணை ? சிங்கள பகுதிக்கு கொண்டு போங்க
15 Mar,2020
கொழும்பில் உள்ள கட்டநாயக்க ஏர்போட் ஆனாலும் சரி. இல்லையென்றால் இலங்கையில் உள்ள எந்த ஒரு மூலையிலும் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால். உடனே அவரை மட்டக்களப்பு கொண்டு செல்கிறது இலங்கை ராணுவம். இவ்வளவு இடம் இருக்க. ஏன் மட்டக்களப்புக்கு கொரோனா நோயாளிகளை கொண்டு வருகிறீர்கள் என்று கூறி. மக்கள் வீதிகளில் இறங்கி போராட ஆரம்பித்துவிட்டார்கள்.
இது கோட்டபாய ராஜபக்ஷவின் ஐடியா என்று கூறுகிறார்கள். எவர் பாதிக்கப்பட்டாலும் மட்டக்களப்புக்கு கொண்டு செல்கிறார்கள். இதனால் மட்டக்களப்பில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லீம்களுக்கு கொரோனா தொற்ற பெரும் வாய்ப்புகள் உள்ளது. கோட்டா முஸ்லீம்களை குறி வைத்தே இவ்வாறு செய்வதாக கூறப்படுகிறது. ஆனால் இடையே தமிழர்களும் அல்லவா மாட்டி தவிக்கிறார்கள். சும்மா வைச்சு செய்கிறார் கோட்டபாய.