கொரோனா நோயாளிகளை அப்படியே கை கழுவும் இத்தாலி: பெரும் கொடுமை
11 Mar,2020
. இத்தாலியில் சுணாமி தாக்கியது போல கொத்துக் கொத்தாக பல நூறு நோயாளிகள் மருத்துவமனைக்கு சென்று வரும் நிலையில். நேற்று மட்டும் சுமார் 116 பேர் ஒரே நாளில் இறந்து போயுள்ளார்கள். அதுபோக கொரோனா வைரஸ் முற்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை மருத்துவர்கள் கவனிக்கவில்லை. அவர்கள் அப்படியே இறக்கட்டும் என்று விட்டுவிடுகிறார்கள். புதிதாத வரும் நோயாளிகளை காப்பாற்றவே அவர்கள் முயற்சிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. இது போர் கால அடிப்படையில் இடம்பெற்று வருகிறதாம்.
அதாவது காப்பாற்ற முடியும் என்று மருத்துவர் நம்பும் நோயாளிகளை மட்டுமே அவர்கள் சிகிச்சை கொடுக்கிறார்கள். மற்றவர்கள் அனைவரையும் அப்படியே கட்டிலில் இருந்து. ஸ. தவித்து இறந்து போக அனுமதிக்கிறார்கள். ஆனால் தாம் அப்படி தான் செய்கிறோம் என்பதனை இத்தாலிய மருத்துவர்கள் தற்போது ஒத்துக்கொண்டு உள்ளார்கள்.
என்ன கொடுமை இது ? கேட்டால் தாம் இரவு பகலாக வேலை செய்கிறோம். எம்மால் இவ்வளவு தான் செய்ய முடியும் என்று சட்டம் பேசுகிறார்கள், மருத்துவர்கள். என்ன கொடுமை இது ?
கணவன் 2ம் மாடியில் பிணமாக: மனைவி மொட்டைமாடியில் 2 நாளாக: இத்தாலி கொரோனா !
இத்தாலியில் பல நகரங்கள் லாக் டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில். கணவன் கொரோனா வைரசால் இறந்து போக. வீட்டின் முன் கதவை திறக்க முடியாமல், என்ன செய்வது என்று தெரியாமல் மொட்டை மாடிக்குச் சென்று கூச்சலிட்டுள்ளார் 2 நாட்களாக. உதவி உதவி என்று அவர் போட்ட கூச்சல் எவருக்கும் கேட்க்கவும் இல்லை. அப்படியே கேட்டால் கூட எவரும் உதவி செய்யும் நிலையிலும் இல்லை.
இறுதியாக பொலிசாரும் மருத்துவர்கள் 2 நாட்கள் கழித்து அவரது வீட்டுக்கு சென்றவேளை. ஒரு ஜன்னல் வழியாக வெளியே சென்று செத்து மடிவதே மேல் என்று கணவன் நினைத்து. அந்த ஜன்னல் ஊடாக அவர் வெளியே செல்ல முற்பட்டுள்ளார். ஏன் எனில் அவர் தனது மனைவிக்காவது கொரோனா தொற்றாமல் இருக்கவேண்டும் என்று எண்ணியுள்ளார். ஆனால் அவரால் முடியவில்லை. ஜன்னல் ஓரமாக இறந்து பிணமாக கிடந்த காட்சிகள் நெஞ்சை உருக்குகிறது.
மனித நேயம் எங்கே சென்றது என்று எண்ணத் தோன்றுகிறது. வீட்டில் ஒருவருக்கு கொரோனா வந்தால், அந்த வீட்டுக்குச் சென்று உதவி செய்வதே ஆபத்து என்று கருதி. எவரும் இந்த முதிய தம்பதிகளுக்கு இறுதிவரை உதவி செய்யவே இல்லை. கடைசியாக மனைவியை காப்பாறியுள்ள மருத்துவர்கள். அவரை வைத்தியசாலையில் சோதனைக்காக அனுமதித்துள்ளார்கள். அந்த தெருவையே அவர்கள் கிருமி நாசினி அடித்து சுத்தம் செய்து வருகிறார்கள்