இத்தாலியின் தனிமைப்படுத்தல் நடவடிக்கையால் 60,000 இலங்கையர்கள் பாதிப்பு!
08 Mar,2020
இத்தாலியின் லோம்பார்டி பிராந்தியமும் மேலும் 14 மாகாணங்களும் தனிமைப்படுத்தலுக்குட்பட்டுள்ளமையினால் அங்கு வசிக்கும் சுமார் 60,000 இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
104,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இத்தாலியில் வசிக்கின்றனர், அவர்களில் சுமார் 60 சதவீதம் பேர் லோம்பார்டி பிராந்தியத்தில் உள்ளனர்.
இந் நிலையில் இத்தாலியின் இந்த தனிமைப்படுத்தல் நடவடிக்கை காரணமாக சுமார் 60,000 இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இந்த தீர்மானம் காரணமாக 16 மில்லின் மக்கள் பாதுக்கப்பட்டுள்ளதடன், தனிமைப்படுத்தலானது ஏப்ரல் மாதம் ஆரம்பப் பகுதி வரை நீடிக்கும் என்று அந் நாட்டு பிரதமர் கூறியுள்ளார்.
இத்தாலியில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 230 ஐ கடந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 5,883 ஆக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்கத்கது.