தெறித்து ஓடிய சுமந்திரன்:
17 Feb,2020
நேற்று முன் தினம்(15) அன்று லண்டனில் உள்ள கறி-லீஃப்ஸ் என்னும் உணவகத்தில், நல்ல கருவோப்பிலையோடு சமையல். அத்தோடு சுமந்திரன் வந்து உங்களோடு பேசுவார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் லண்டன் உறுப்பினர் சிலர் நோட்டீஸ் அடித்து வெளியிட்டார்கள். அதற்கு அமைவாக கறி-லீஃப்ஸ் உணவகத்தின் பெரும் பகுதி புக் செய்யப்பட்டும் இருந்தது. சுமந்திரன் வந்தால் அவரிடம் பல கேள்விகள் கேட்க்க வேண்டி இருப்பதாக கூறி, தமிழ் இளைஞர்கள் பலர் திரண்டு எழுந்தார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாக செயல்படும் சில பல பழைய அசிங்க அரசியல்வாதிகளை வைத்து இந்த கூட்டத்தை லண்டனில் நடத்தி. சுமந்திரனிடம் ஒரு நல்ல பெயரை எடுக்கலாம் என திட்டமிட்ட சிலருக்கு. கன்னத்தில் செருப்பால் அறைந்த கதையாக இந்த செய்தி காதுக்கு எட்டியது. அது என்னவென்றால் , பல தமிழ் இளைஞர்கள் வந்து சுமந்திரனிடம் கேள்வி கேட்க்க உள்ளார்கள் என்பது தான். இதனை சூட்சுமமாக அறிந்து கொண்ட குறித்த லண்டன் கிளை அமைப்பு. இந்த சந்திப்பை அப்படியே கான்சல் செய்து விட்டார்கள்.
சுமந்திரனை தேடி இளைஞர்கள் கறி லீஃப் சென்ற வேளை, அவர்கள் அங்கே இல்லை. இதனால் கடுப்பான இளைஞர்கள், மரியாதையாக தமது கேள்விகளை ஒரு பேப்பரில் எழுதி கண்ணாடியில் ஒட்டிவிட்டு சென்றுள்ளார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பின் லண்டன் கிளையை அணுகி, ஏன் சுமந்திரன் வரவில்லை என்று கேட்டால். அதற்க்கும் எமக்கும் சம்பந்தமே இல்லை. அது தனிப்பட்ட சில நபர்கள் செய்த வேலை என்று சொல்லி தப்பிவிட்டார்கள். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் லண்டன் கிளையினரின் உத்தியோக பூர்வ மின்னஞ்சல் வலையத்தில், குறித்த இளைஞர்களை மிக மிக கேவலமாக திட்டி எழுதியுள்ளார்கள். அவர்கள் கோட்டபாயவின் அடி வருடிகள் என்றும். கோட்டாவின் எலும்பு துண்டுக்கு அலையும் பேர்வழிகள் என்றும் எழுதியுள்ளார்கள்.
இந்த சந்திப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பின் லண்டன் குழு, ஏற்பாடு செய்யவில்லை என்றால். ஏன் இவர்களுக்கு குறித்த இளைஞர்கள் மீது இவ்வளவு கோபம் ஏற்படவேண்டும் ? லண்டன் வருவதாக இருந்த சுமந்திரன் எங்கே ஓடி தப்பினார் ? தமிழர்களுக்காக செயல்படுவதாக கூறும் சுமந்திரன் ஏன் தமிழர்களிடம் இருந்து ஓடி மறைய வேண்டும் ? இப்படி ஒரு சம்பவம் எந்த நாட்டிலாவது நடந்துள்ளதா ? ஒரு இனத்திற்காக செயல்படும் நபர். அந்த இனத்தை கண்டு பயந்து ஓடுவது உண்டா? ஏன் இந்த இழி நிலை. மடியில் கனம் இல்லை என்றால் வழியில் பயம் இல்லை என்பார்கள். இவர் சுத்தமான ஆளாக இருந்தால் , ஏன் தமிழர்கள் இவரிடம் கேள்வி கேட்க்க போகிறார்கள் ? இனியாவது தன்னை திருத்திக் கொள்வாரா சுமந்திரன் ?
இல்லையென்றால் ஒவ்வொரு நாடாக இவர் சென்று பயந்து, பின் கதவால் ஓடவேண்டி தான் இருக்கும். இது அவர் இறக்கும் வரை தொடரும் என்பதில் ஐயமே இல்லை.