கொரோனா வைரஸ் கொழும்பில்: மன்னாருக்கும் பரவச் செய்ய திட்டம் தீட்டம் ?
28 Jan,2020
சற்று முன் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், கொழும்பில் உள்ள IDH மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது போக இலங்கையில் சீன நாட்டவர்கள், சுமார் 2 லட்சம் பேர் தற்போது தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களில் பலர் அடிக்கடி சீனா சென்று திரும்பியுள்ளார்கள். இன் நிலையில் இலங்கையில் உள்ள சீனர்களை முற்று முழுதாக பரிசோதனைக்கு உற்படுத்தவேண்டும் என்று, பலரால் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில். இதனை ஸ்ரீலங்கா அரசாங்கம் உதாசீனம் செய்துள்ளது. சுமார் 40,000 ஆயிரம் சீனர்களை மன்னாருக்கு கொண்டு சென்று, அங்கே அவர்களை எண்ணைக் கிணற்று வேலையில் இறக்க இலங்கை அரசு முற்பட்டுள்ளமை பெரும் சந்தேகங்களை கிளறியுள்ளது.
மன்னாரில் வேலை பார்க்க எனச் செல்லவுள்ள, சீனர்களில் எவருக்காவது கொரோனா வைரஸ் தாக்கம் இருக்குமேயானால். இதனால் மிக மிக பாதிக்கப்படப் போகிறவர்கள் தமிழர்களாக தான் இருக்க முடியும். ஒருவேளை தற்போது மன்னார் செல்லவுள்ள சீனார்கள், நோய் தாக்கம் இல்லாதவர்களாக கூட இருக்கலாம். ஆனால் அவர்கள் மன்னாரில் வேலை செய்யும் வேளைகளில், விடுமுறைக்காக சீனா சென்று இன் நோயைக் காவி வருபவர்களாக மாறக் கூடும். ஏற்கனவே போரில் பல லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில். கொரோனா வைரஸ் பரவி மேலும் பல ஆயீரம் தமிழர்கள் இறக்க வாய்ப்புகள் உள்ளது. இப்படி நடந்தால் இது இயற்க்கை என்று கூறி இலங்கை அரசும் தப்பி விடும்.
எனவே மன்னாரில் உள்ள மக்கள் இது தொடர்பாக விழிப்புணர்வோடு செயல்படுவது நல்லது. குறித்த வைரஸ் தாக்கம் உலகளாவிய ரீதியில் கட்டுப்படுத்தப்பட்ட பின்னரே எந்த ஒரு நடவடிக்கையிலும் சீனர்கள் இறங்க முடியும் என்ற கண்டிப்பான உத்தரவை வழங்கவேண்டிய ஒரு கட்டாயத்தில் இலங்கை அரசு உள்ளது. இல்லையெனில் மக்கள் போராட்டம் வெடிக்கும் காலகட்டம் தோன்றலாம்.