லக்ஷ்மன் கதிர்காமரின் கொலை விவகாரம்: புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினருக்கு சிறை
21 Jan,2020
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலை சம்பவம் தொடர்பாக விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு ஜேர்மன் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ஜேர்மனின் ஸ்டட்காரர்ட் ( Stuttgart) நகரில் அமைந்துள்ள நீதிமன்றத்தினால் இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஜி.நவநீதன் என்ற குறித்த சந்தேகநபருக்கே ஜேர்மன் சட்டத்தின் பிரகாரம் ஆறு வருடங்களும் 10 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் வெளிவிகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் இருந்த இடம் குறித்து, விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தகவல் வழங்கியதாகவே இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி, முன்னாள் வெளிவிகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொழும்பில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இருந்த சந்தர்ப்பத்தில், துப்பாக்கிதாரி ஒருவரினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.