கோத்தாவின் ஆட்சியில் அடுத்தடுத்து கற்பழிக்கப்பட்ட பெண்கள்
05 Dec,2019
இலங்கையில் வெவ்வேறு பகுதிகளில் இரண்டு யுவதிகள் கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அனுராதபுரம், நொச்சியாகம – லிங்கல பகுதி மற்றும் காலி நகரில்இந்த பொடுமை நடந்துள்ளது.
இது தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டதுடன், இவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அனுராதபுரம், நொச்சியாகம – லிங்கல பகுதியில் 27 வயதான பெண் ஒருவரை கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய குற்றச்சாட்டில் கைதான இரண்டு பேர் எதிர்வரும் 16ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் காலி நகரில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் 19 வயதான யுவதி ஒருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சந்தேகத்தில் கைதான 3 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் 27, 23 மற்றும் 25 வயதுகளை உடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் நேற்று காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 17ம் திகதி வரையில் அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.