ரணிலுக்கு வழங்கப்பட்டு வந்த விசேட அதிரடிப்படை நீக்கம்!மைத்திரிக்கு ஏற்பட்டநிலை;
23 Nov,2019
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டு வந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
புதிய ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷ, பல்வேறு அதிரடி நடவடிக்கைகள தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றார்.
அந்தவகையில் தற்போது ரணில் உள்ளிட்ட பல ஐ.தே.க பிரமுகர்களின் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் மலிக் சமரவிக்கரம, திலக் மாரப்பன ஆகியோரின் விசேட அதிரடிப்படை பாதுகாப்பும் விலக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பு விலக்கப்படவில்லையென குறிப்பிடப்படுகிறது.
மைத்திரிக்கு ஏற்பட்டநிலை;
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தொலைபேசி அழைப்புகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டு கொள்வதில்லை எனவும் மேலும் சிலர் அவரது தொலைபேசி அழைப்புக்களை துண்டித்துள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்ற உறுப்பினராக வருவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பதவி விலக தயாரில்லை என்பதுடன் அதனை நிராகரித்துள்ளனர்.
இதனால் மைத்திரி நாடாளுமன்றத்திற்கு வரும் வாய்ப்பு குறைந்து வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த போது, பதவி விலக தயாராக இருப்பதாக தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது
கோட்டாபயவுக்கு மக்களால் அனுப்பப்பட்ட அவசர கடிதம்!
தெரனியாகல பகுதி மக்கள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவிடம் பாதுகாப்பு கோரி கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ளனர்.
அதாவது, ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று குறித்த பகுதி மக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டவர்களால் தொடர்ந்து அச்சுறுத்தல் நிலவுவதாக கேகாலை மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே தமக்குரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக இராணுவ முகாம் அமைக்குமாறு கோரி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதமொன்றை அப்பகுதி மக்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தெரனியாகல பிரதேச செயலகம், பஸ்னாலக கிராம சேவகர் பிரிவிற்கு உட்பட்ட நூரி தோட்டத்தில் சுமார் 7 வருடத்தற்கு முன்னர் தோட்ட முகாமையாளர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார். குறித்த கொலைச் சம்பவத்தை தொடர்ந்து, அதனுடன் தொடர்புபட்ட 18 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து அந்த தோட்டத்தில் பாதுகாப்பு நிமித்தம் விஷேட இராணுவ முகாம் ஒன்றினை அமைத்து, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். கடந்த காலம் ஆட்சியில் இருந்த அரசாங்கம் அதனை அகற்றியது. இந்நிலையிலேயே, இவ்வாறான பிரச்சினைகள் உருவாகி வருகின்றன எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாகவும் தற்போது மீண்டும் மேற்படி சட்டவிரோதமான செயற்பாடுகள் அனைத்தும் இப்பிரதேசத்தில் அதிகரித்து உள்ளன.
ஆனால் முன்னா இராணுவ முகாம் அமைந்திருந்த சமயம் குறித்த தோட்டத்திலும் அப்பகுதியை அண்டிய கிராம பகுதியிலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தபட்டதுடன், சட்டவிரோத மதுபான உற்பத்தி, சட்டவிரோத மரம் வெட்டுதல், பாலியல் வன்முறைகள், சட்டவிரோதமான மணல் விற்பனை போன்ற செயற்பாடுகள் அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழல் ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
தற்போது தேர்தல் காலத்தில் ஏற்பட்ட பிரச்சினையும் கூட இராணுவ முகாம் அகற்றப்பட்டதன் காரணமாகவே தான் எனவும் தெரிவித்துள்ளனர். எனவே இவற்றைக் கவனத்திற் கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயற்பட வேண்டும் எனவும் அவர்கள் அனுப்பிய கடிதத்தில் கோரியுள்ளனர்.
அதாவது நீங்கள் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் இருந்த பாதுகாப்பை மீண்டும் பெற்று தருமாறும், சட்டவிரோதமான செயற்பாடுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து எங்களின் வாழ்வில் ஒளியேற்றுமாறும் கோரிக்கை விடுக்கிறோம்” என அக்கடிதத்தில் மக்கள் தெரிவித்துள்ளனர்.