இனி 15 ஆண்டுகள் இவர்கள் கையில் தான் இலங்கை
20 Nov,2019
ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸ நேற்று யோஷித ராஜபக்ஸவின் இல்லத்துக்கு விஜயம் மேற்கொண்டு ராஜபக்ஸ குடும்பத்தின் புதிய வாரிசை பார்வையிட்டு மகிழ்ந்துள்ளாராம் .
ஜனாதிபதியாக இவர் கடமைகளை பொறுப்பேற்ற பிற்பாடு மஹிந்த ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ, சகிதம் சென்று குழந்தை நிர்வன் ராஜபக்ஸவை தூக்கி அரவணைத்து வைத்திருந்தார் என்று அதிர்வு இணையம் மேலும் அறிகிறது .
இன்னும் 15 வருடங்களுக்கு இலங்கை ராஜபக்ஷர்கள் பிடியில் தான் சிக்கி இருக்க போகிறது
ளுநர்களே வீட்டுக்கு போங்க; கோத்தாபய விடுத்துள்ள உத்தரவு!
இலங்கையின் அனைத்து மாகாண ஆளுநர்களையும் பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளதாக ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.
வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் உட்பட அனைத்து ஆளுநர்களையும் தங்கள் பதவிகளில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பையடுத்து வடக்கு கிழக்கு உட்பட அனைத்து ஆளுநர்களும் தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன், மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில், மத்திய மாகாண ஆளுநர் ரஜித கீர்த்தி தென்னகோன், ஊவா மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன, தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர, கிழக்கு மாகாண ஆளுநர் விஜயலால் டி சில்வா, வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, வடமேல் மாகாண ஆளுநர் பசேல ஜயரத்ன, சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திஸாநாயக்க ஆகியோர் பதவி விலகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நாளை மஹிந்த பிரதமர்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கான மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து, புதிய அரசாங்கமொன்றை ஸ்தாபிக்கும் முகமாக பிரதமர் பதவியிலிருந்து வெளியேறுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
மேலும், இதுதொடர்பாக நாளைய தினம் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அலரிமாளிகையில் இன்று (புதன்கிழமை) விசேட உரையொன்றை விடுத்தே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 5 வருட காலத்தில் எமது நாட்டில் ஜனநாயகம், மனித உரிமை, கருத்துரிமை, ஐக்கியத்திற்கான செயற்பாடுகளை நாம் மேற்கொண்டோம்.
19 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக அனைத்து நிறுவனங்களை அரசாங்கத்தின் தலையீட்டிலிருந்து விடுவித்திருந்தோம்.
எமது செயற்பாடுகளின் பலனாகத்தான் இந்த ஜனாதிபதித் தேர்தல் மிகவும் அமைதியாகவும் ஜனாநாயக ரீதியாகவும் நடைபெற்று முடிந்துள்ளது. எமது இந்த செயற்பாடுகளினால் வளமானதொரு எதிர்காலம் உருவாக்கப்பட்டுள்ளது.
நான் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் ஒரு சந்திப்பில் ஈடுபட்டேன். இதன்போது நாடாளுமன்றின் எதிர்க்கால நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடினோம்.
நாடாளுமன்றில் எமக்கு பெரும்பான்மைப் பலம் இருந்தாலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குக் கிடைத்துள்ள பெரும்பான்மை மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து, அவர்களின் அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க நாம் இடமளித்துள்ளோம்.
நாம் என்றும் ஜனநாயகத்திற்கு மதிப்பளிப்பவர்கள். ஜனநாயகத்திற்கு இணங்க செயற்படுபவர்கள்.
அதற்கிணங்க, அவர்களுக்கு புதிய அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க இடமளித்து, நாம் பிரதமர் பதவியிலிருந்து விலக தற்போது தீர்மானித்துள்ளோம்.
இதற்கான அறிவிப்பை நான் நாளைய தினம் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கு அறிவிப்பேன்.
நான் பிரதமராக செயற்பட்ட இந்தக் காலத்தில், என்னை சிலர் பாராட்டியதோடு, சிலர் அவமரியாதையும் செய்திருந்தார்கள்.
நல்லதைப் போல கெட்டவைகளுக்கும் நான் முகம் கொடுக்க வேண்டியேற்பட்டது. இப்படியான இரண்டு தரப்பினருக்கும் நான் இவ்வேளையில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என மேலும் தெரிவித்துள்ளார்.