கோத்தாவின் ஆதரவாளர்கள் தமிழர்களை தாக்கிய சம்பவம்! பொலிஸார் அதிரடி நடவடிக்கை!
20 Nov,2019
எட்டியந்தோட்டையில் பதற்றம்: தமிழ் மக்கள் வீடுகள் சேதம்
கேகாலை, எட்டியந்தோட்டை பிரதேசத்தில் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
சில வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.எட்டியந்தோட்டை கணேபல்ல தோட்டதிற்குள் இன்று இரவு நுழைந்த கும்பல், அங்குள்ள தமிழ் மக்களின் சில வீடுகளை சேதப்படுத்தியுள்ளனர்.
அங்குள்ள சில பெண் பிள்ளைகளிடம் அநாகரிகமாக அந்த கும்பல் நடக்க முயற்சி செய்ததாக கனேபல்ல பிரதேச மக்கள் தெரிவித்தனர். யாருக்கு இனி வாக்கு அளித்தீர்கள் என்று கேட்டு மிகவும் அநாகரிகமாக குறித்த கும்பல் செயற்பட்டதாக தெரிவிக்கின்றன.
இந்த செயலில் ஈடுபட்டவர்கள் குறித்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிவித்த கனேபல்ல மக்கள், எட்டியந்தோட்டை பொலிஸ், நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும் கூறினார்.
கேகாலை மாவட்டம் யட்டியந்தோட்டை – கனேபொல மேற்பிரிவு தோட்டத்தில் தமிழர்கள் மீது இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனேபொல மேற்பிரிவு தோட்ட லயன் குடியிருப்பினுள் நுழைந்த சிலர், தோட்ட மக்கள் மீது நேற்று முன்தினம் இரவு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன், மக்களின் உடைமைகளுக்கும் சேதம் விளைவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவத்திற்கும் அரசியலுக்கும் தொடர்பு இல்லை எனவும், மது போதையில் இருந்த சிலரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் குறித்த பகுதியில் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் என கேட்டு சிறுபான்மை மக்களாகிய இந்திய வம்சாவழியை சேர்ந்த மலையக பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள் மீது குண்டர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது