சிங்கள ராணுவம் வெளியேவர கூடாது : சற்று முன் ஐரோப்பிய ஒன்றியம் போட்ட கட்டளை முகாமில் முடங்கியுயது ராணுவம்
15 Nov,2019
ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக 120 வௌிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
7 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கண்காணிப்பாளர்கள் வருகை தந்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டிருந்தது.
இதனைத் தவிர வெவ்வேறு சர்வதேச அமைப்புகளை சேர்ந்த கண்காணிப்பாளர்களும் நாட்டை வந்தடைந்துள்ளதாக ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இலங்கை வந்துள்ள வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.
அந்த வகையில் தேர்தல் நடைபெற்று முடியும்வரை இலங்கை இராணுவத்தை முகாம்களிலிருந்து வெளியில் வரவேண்டாமென அதிரடி உத்தரவொன்றை பிறப்பித்துள்ளனர். மேலும் இலங்கை பொலிஸார் மட்டுமே தேர்தல் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படவுள்ளதாகவும் குறித்த உத்தரவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.