மைத்திரியை மதவடியில் வைத்து அடிக்க ஷமால் ராஜபக்ஷ திட்டம்- பிராந்திய செய்தி
15 Nov,2019
முதல் நாள் ஒன்றாக இருந்து, மகிந்தவோடு இடியப்பமும், முட்டை பால் அப்பமும் தின்று விட்டு, அடுத்த நாள் ஜனாதிபதி வேட்ப்பாளராக தன்னை அறிவித்தவர் மைத்திரி. 5 வருடங்களுக்கு முன்னர் நடந்ததை எவரும் மறந்திருக்க மாட்டோம். அன்றைய தினம், மகிந்தவை எதிர்த்து களம் இறங்கிய மைத்திரி, வெல்லவே மாட்டார். என்ற இறுமாப்பில் இருந்தார் மகிந்த. ஆனால் 1% சதவிகித வாக்குகளால் மைத்திரி வெற்றிபெற்ற பின்னர் கூட, அலரி மாளிகையில் இருந்து விலகிச் செல்ல மகிந்த ஒப்புகொள்ளவில்லை. அதே நேரத்தில் நடந்த தேர்தலை ரத்துச் செய்ய ராணுவத்தோடு கலந்தாலொசித்தார் மகிந்த.
இதனை அமெரிக்கா உட்பட பல நாடுகள் கடுமையாக எதிர்க்கவே, அவர் பின்னர் பின்வாங்கிச் சென்றார். இதனால் மகிந்த கடுப்பில் இருக்கிறாரோ இல்லையோ. ஆனால் அவரது சகோதரர், ஷமால் ராஜபக்ஷ மைத்திரி மீது, மிக மிக கடுப்பில் உள்ளாராம். சகோதரன் கோட்டபாய வெல்லட்டும். தங்காலையில் உள்ள மெதமுலனவுக்கு, மைத்திரியை கூட்டிப் போய் கன்னத்தை பொத்தி ஒரு அடியாவது கொடுக்கவேண்டும் என்பது ஷமால் ராஜபக்ஷவின் நீண்ட நாள் கனவு என்கிறார்கள். இது இவ்வாறு இருக்க, ரொயிட்டர் சர்வதேச செய்திச் சேவை, நடத்திய கருத்துக் கணிப்பில். நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், கோட்டபாய ராஜபக்ஷவே வெல்வார் என்று அது கூறியுள்ளது.
சொல்லப்போனால் இப்பவே மைத்திரிக்கு பாதி நடுக்கம் பிடிக்க ஆரம்பித்திருக்கும். இது இவ்வாறு இருக்க இவர்கள் தான் வெள்ளை வான் கடத்தல் காரர்கள் என்று, ஆட்களை பிடித்து வந்து மேடை ஏற்றி, கோட்டபாயவுக்கு எதிராக பிரச்சாரம் செய்த அனைவரும் தற்போது கிடு நடுங்கி இருப்பார்கள். ஏன் என்றால் இவர்களை உண்மையாகவே வெள்ளை வேன் 16ம் திகதிக்கு பின்னர் தூக்கலாம் ஸ சமீபத்தில் கொழும்பில் நடந்த முஸ்லீம் ஜிகாடிகளின் குண்டு வெடிப்பு சம்பவமே, பல சிங்களவர் மனதை மாற்றியுள்ளது என்று கூறப்படுகிறது. நாட்டுக்கு ஒரு திடமான தலைவர் தேவை, என்ற நிலைப்பாட்டில் சிங்களவர்கள் இருப்பதால். அவர்கள் கோட்டபாயவை தேர்வு செய்ய வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.
எனவே தமிழர்களுக்கு ஒரு கசப்பான அல்லது கசப்பு கலந்த இனிப்பான செய்திகள் இன்னும் 2 தினங்களில் வெளிவர உள்ளது. அதிர்வு இணையமானது, சனிக்கிழமை(16) இரவில் இருந்தே.. தொகுதி தொகுதியாக , யார் வெல்லப் போகிறார்கள் என்ற செய்தியை நிமிடத்திற்கு நிமிடம் பிரசுரிக்க உள்ளது. எனவே அதிர்வின் செய்திகளோடு இணைந்திருங்கள் மக்களேஸ