காட்டி கொடுக்கும் சிங்களம் ஸ புகைப்படங்கள்
12 Nov,2019
தமிழர் இளைஞர்களுக்கு செய்த சித்திரவதைகளையும். காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதனையும், அது போக எப்படி கடத்தினோம் என்று கூட தற்போது சிங்களவர்கள் ஒப்புக்கொள்ள ஆரம்பித்துள்ள விடையம். அவர்களுக்கே மீண்டு பெரும் தலை வலியைக் கொடுக்க ஆரம்பித்துள்ளது. கோட்டபாய செய்த திருகு தாளங்களை, சஜித் பிரேமதாசவின் ஆட்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர. சஜித் மற்றும் அவரது அப்பா பிரேமதாச ஆகியோர் தமிழர்களை எவ்வாறு கொன்றார்கள் என்று கோட்டபாய ஆட்கள் வெளியே கொண்டு வந்து.
அதிர்சியான புகைப்படங்கள், சித்திரவதை முகாம்கள், இதுபோக கடத்தல் காரர்களை கூட மேடை ஏற்றியுள்ளார்கள் இந்த தேர்தல் நேரத்தில். இவை அனைத்துமே இடம்பெறுவது ஏன் என்றால், தமிழர்களின் வாக்குகளை அபகரிக்கவே. சில தினங்களுக்கு முன்னர் யாழில் சந்திரிக்கா பண்டாரநாயக்க,பிரபாகரன் அவர்களை “சார்” என்று அழைத்து பேசினார். இது கூட சந்திரிக்காவின் ஒரு நாடகம் தான். இதனை கூட சில இணையங்கள் பெரிதாக கொட்டை எழுத்தில் போட்டது. ஆக மொத்ததில் சிங்களவர்களுக்கு இடையே நடக்கும் கடும் மோதலில்.
யார் அதி கூடிய தமிழர்களை கொலை செய்தார்கள், என்று பட்டி மன்றம் போட்டு ஆதாரங்களை காட்டுவதில் சிங்களவர்கள் மிக மிக மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள். இதனால் இது நாள் வரை புதைந்து கிடந்த பல தகவல்கள் வெளியாகி வருகிறது. இதில் தமிழர்கள் செய்யவேண்டிய விடையம் ஒன்று உள்ளது. அதாவது இவர்கள் தற்போது சொல்லும் உண்மைகளை ஆவணப்படுத்தி, மேற்குலக நாடுகளுக்கு காட்டவேண்டும். இவர்கள் கொடுக்கும் ஒப்புதல் வாக்கு மூலங்களை பதிவு செய்து, காட்டுவதன் ஊடாகவே, தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை நாம் வெளியே கொண்டுவர முடியும்.