ஆசியாவில் அகலக்கால் பதிக்கும் சீனாவின் முயற்சிகளின் மையமாக இலங்கையை மாற்றிய -கிளர்ச்சியை தோற்கடித்த -சர்ச்சைக்குரிய அரசியல் பரம்பரையொன்று இலங்கையில் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற முயல்கின்றது.
தனது சகோதரர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தின் போது பாதுகாப்பு செயலாளர் என்ற அடிப்படையில் மூன்று தசாப்தகால கிளர்ச்சியை நசுக்கிய கோத்தாபய ராஜபக்ச நவம்பர் 16 ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றார்.
தமிழ் சிறுபான்மை இனத்தை சேர்ந்த கெரில்லாக்களிற்கு எதிரான வெற்றியை பெரும்பான்மை பௌத்த சிங்களவர்கள் பாராட்டும் அதேவேளை பாரியளவு மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.
ராஜபக்ச அரசாங்கம் சீனாவிடமிருந்து மில்லியன் டொலர்களை பெற்று உட்கட்டமைப்பு திட்டங்களை முன்னெடுத்தது,இதனால் பொருளாதார அபிவிருத்தி ஏற்பட்டது என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் இந்த தந்திரோபாயம் இலங்கையை மோசமான கடனாளியாக்கியது.
கடனிலிருந்து தப்புவதற்காக ராஜபக்சவின் சொந்த ஊரில் உள்ள துறைமுகத்தை இலங்கை சீனாவிற்கு வழங்கியது.
தற்போது மனித உரிமை விவகாரங்களும். இலங்கை மீண்டும் சீனாவின் பக்கம் சாய்வதற்கான வாய்ப்புகளும் மேற்குலகில் தலைநகரங்களில் கரிசனையை அதிகரித்துள்ளன.
வோசிங்டன் இந்தியா போன்ற தனது சகாக்களுடன் இணைந்து ஆசியாவில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதை எதிர்கொள்ள முயல்கின்றது.பிராந்தியத்;தை சர்வதேச வர்த்தகத்திற்கான பகுதியாக வைத்திருப்பதற்கு முயல்வதாக அமெரிக்கா தெரிவிக்கின்றது.
சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தை ஆரம்பத்திலேயே ஏற்றுக்கொண்ட நாடாக இலங்கை காணப்படுகின்றது,புதிய பட்டுப்பாதை திட்டம் ஆசியா முழுவதும் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதன் மூலம் சீனாவின் செல்வாக்கை அதிகரிக்க முயல்கின்றது.
ராஜபக்சாக்களை அதிகளவு மேற்குலகு சார்பான அரசாங்கமொன்று தோற்கடித்தது,இந்த அரசாங்கத்தின் கீழ் இலங்கை இந்து சமுத்திரத்தில் அமெரிக்க கடற்படையின் புதிய தளமாக மாறியது.
இலங்கை புதிய பொருளாதார உதவி திட்டத்தில் கைச்சாத்திடவேண்டும் என எதிர்பார்க்கும் அமெரிக்கா தனது படையினரின் பிரசன்னத்திற்கும் இலங்கை இணங்கவேண்டும் என விரும்புகின்றது.
ராஜபக்சாக்களின் ஆட்சியின் கீழ் இந்த ஒப்பந்தங்களிற்கு சாத்தியமில்லை என ஆய்வாளர்களும் இராஜதந்திரிகளும் தெரிவிக்கின்றனர்.
சகோதரர்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை நிராகரிக்கின்றனர்.
தங்களது முன்னைய ஆட்சிக்காலத்தில் வேறு நாடுகள் நிதி வழங்காததன் காரணமாகசீனாவை நாடுவதை தவிர வேறு வழியிருக்கவில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இம்முறை அமெரிக்கா உட்பட பல நாடுகளிடமிருந்து மூதலீடுகளை பெறமுயலப்போவதாக அவர்கள் குறிப்பிடுகின்றார்.
முன்னைய அரசாங்கத்தின் கீழ் நாங்கள் சில தவறுகளை செய்தோம்,இம்முறை நாங்கள் மாற்றங்களை மேற்கொள்வோம் என்கின்றார் கோத்தபாயவின் பிரச்சாரத்திற்கு பொறுப்பாகவுள்ள அவரது சகோதரரான பசில் ராஜபக்ச
இலங்கையில் மனித உரிமை விவகாரங்களில் ஜனநாயகத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மீண்டும் பாதிக்கப்பட்டால், கடந்த காலத்தை போல இலங்கைக்கான வர்த்தக சலுகையை மீண்டும் நிறுத்தவேண்டியிருக்கும் என ஐரோப்பிய நாடுகள் கவலை கொண்டுள்ளன.
2009 யுத்தவெற்றி மனித உரிமைகள் பெருமளவு மீறப்பட்ட நிலையிலேயே பெறப்பட்டது என தெரிவிக்கும் விமர்சகர்கள் பொதுமக்கள் இலக்குவைக்கப்பட்டனர்,சரணடைந்த போராளிகள் காணாமல் செய்ய்பபட்டனர் என தெரிவிக்கின்றனர்.
ராஜபக்சாக்கள் இரகசிய வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்,அதிருப்தியாளர்களிற்கு எதிராக அடக்குமுறைகளில் ஈடுபட்டனர்,பௌத்த தீவிரவாத சக்திகளுடன் தொடர்புவைத்துள்ளனர் – குடும்ப ஆட்சியில் ஈடுபட்டனர் போன்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.
ராஜபக்சாக்கள் பெரும் சுமைகளுடன் வருகின்றனர், என தெரிவித்த மேற்குலகை சேர்ந்த சிரேஸ்ட இராஜதந்திரியொருவர் அவர்கள் யுத்தத்தை வென்றனர் ஆனால் அமைதியை ஏற்படுத்துவதில் தோல்வியடைந்தனர்,கடந்த காலங்களில் இருந்து அவர்கள் பாடங்களை கற்றுக்கொண்டுள்ளனரா என்பதே பெரும் கேள்வி என்கின்றார்.
கடந்த ஐந்து வருடங்களில் யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களிற்கு பொறுப்பு கூறுவதை நோக்கிய சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.சிவில் உரிமைகள் முன்னேற்றம் கண்டுள்ளன, ஆனால் ஊழல் குறித்த குற்றச்சாட்கள் காணப்படுகின்றன,ஏப்பிரலில் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே புலனாய்வு தகவல்கள் கிடைத்தும் நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்த குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன,பொருளாதாரமும் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
தனது அரசாங்கம் ஊழல் ஒழிப்பு தொடர்பான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவி;ல்லை என்கின்றார் இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரட்ண உலக பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட வீ;ழ்ச்சி இலங்கையையும் பாதித்துள்ளது எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
ஆனால் நாங்கள் ஜனநாயகத்தை வலுப்படுத்தியுள்ளோம்,தற்போது வெளிப்படையான வெளிவிவகார கொள்கையை கொண்டுள்ளோம் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
ராஜபக்ச குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக பல வருடங்களாக முயற்சிகளை மேற்கொண்டுவந்துள்ளது.
கடந்த வருடம் பிரதமராவதற்கு மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்ததுடன் நாட்டை அரசமைப்பு நெருக்கடிக்குள் தள்ளின.
அடுத்த சில மாதங்களில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்ற தேர்தல் மூலம் மகிந்த ராஜபக்ச பிரதமராக முயற்சிக்கலாம்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிட்ட கோத்தாபாய ராஜபக்ச பாதுகாப்பு தொடர்பில் தனக்குள்ள திறமையை தேர்தல் பிரச்சாரங்களில் முன்வைக்கின்றார்.
சர்வதேச அளவில் காணப்படும் வலுவான மனிதர்கள் என்ற போக்கின் தொடர்ச்சியே கோத்தாபய ராஜபக்ச என்கின்றார் ஜெயதேவ உயாங்கொட, பொதுமக்கள் மத்தியில் காணப்படு;ம் ஆழமான பாதுகாப்பின்மை குறித்த உணர்வுகளை இவர்கள் பயன்படுத்திக்கொள்கின்றனர் என்கின்றார் இவர்.
மனித உரிமை மீPறல்களிற்காக சிறையில் இருக்கும் படைவீரர்களை விடுதலை செய்வேன்,யுத்த குற்றவாளிகளை விசாரணை செய்யும் ஐநாவின் திட்டத்திலிருந்து விலகுவேன் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தங்கள் குடும்பம் ஆட்சியை கைப்பற்றினால் ஐந்து பில்லியன் டொலர் பெறுமதியான உட்கட்டமைப்பு திட்டங்களை ஆரம்பிக்க எண்ணியுள்ளதாக பசில் ராஜபக்ச தெரிவிக்கின்றார்.
கடந்த ஐந்து வருடங்களில் எதுவும் இடம்பெறவில்லை இதன் காரணமாக நாங்கள் எங்கள் பணிகளை துரிதப்படுத்தவேண்டும் என்கின்றார் அவர்.
ஆனால் இம்முறை கடனிற்கு பதில் முதலீடுகள் குறித்தே நாங்கள் கவனம் செலுத்துகின்றோம்,அனைத்து நாடுகளையும் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளோம்,என அவர் தெரிவித்துள்ளார்.
ராஜபக்சாக்கள் இந்தியாவை நோக்கி நேசக்கரம் நீட்டியுள்ளனர்.
எனினும் இலங்கையும் ஏனைய பல நாடுகளும் சீனாவாலேயே திட்டங்களை துரிதமாக நிறைவேற்றமுடியும் என்பதை உணர்ந்துள்ளன.
சீனாவால் மாத்திரமே இது முடியும், அந்த நாட்டின் வங்கியுள்ள, இலங்கையுடன் அந்த நாட்டிற்கு சிறந்த உறவுள்ளது, புதிய பட்டுப்பாதை திட்டமுள்ளது என தெரிவிக்கின்றார் ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவராக பணியாற்றிய பேர்னார்ட் குணதிலக.
கோத்தபாய ராஜபக்சவை விட விரும்பத்தகாத - சட்டபூர்வ தன்மையற்ற நபர்களுடன் அமெரிக்கா உறவை பேணியுள்ளது என சுட்டிக்காட்டும் ஹெரிட்டேஜ் பவுன்டேசனின் ஆய்வாளர் ஜெவ் ஸ்மித் கோத்தாபய ராஜபக்ச குறித்து மேற்குலகின் கரிசனைக்குரிய விடயங்கள் உள்ளன ஆனால் அவர் இலங்கையில் உண்மையாகவே பிரபலமானவராக காணப்படுகின்றார்,கோத்தபாய ஏதாவது ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கைகளில் ஈடுபடும் வரை நாங்கள் இலங்கை மக்களின் விருப்பத்தை மதிக்கவேண்டும் என்கின்றார்