பகிரங்க விவாதத்திற்கு வருமாறு ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு சிவாஜி அழைப்பு
02 Nov,2019
தமிழ் மக்களுக்கு நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள், தமிழ் மக்கள் ஏன் உங்களுக்கு வாக்களிக்கவேண்டும் என்பது குறித்து வெளிப்படுத்துவதற்கு பகிரங்க விவாதத்திற்கு வருமாறு ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் அழைப்பு விடுத்தார்.
மட்டக்களப்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “உண்மையான சிங்கள பௌத்த வீரன் யார் என்ற தேர்தலே தற்போது நடைபெறவுள்ளது. தற்போது கடும்போட்டி நிலவுகின்றது. சஜிதா கோட்டாபயவா என்ற போட்டியே ஏற்பட்டுள்ளது.
இந்த போட்டியின் மத்தியில் தமிழ் மக்களுக்கு எதனையும் தரமாட்டோம் என்று அந்த மூவரும் சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் தமிழ் மக்களின் வாக்குகளையும் பெறுவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மிகப்பெரும் தமிழின படுகொலைகளை நிகழ்த்திய கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எக்காரணம் கொண்டும் தமிழ் மக்கள் வாக்களிக்க முடியாது. அதேபோன்று தமிழின் படுகொலைகளை செய்த இராணுவத்தினை காப்பாற்றுகின்றேன், தமிழின படுகொலைகளை செய்த இராணுவத்தளபதி என்னுடன் உள்ளார் அவரை பாதுகாப்பு அமைச்சராக்குவேன் என்று ஏட்டிக்கு போட்டியாக ஒருவர் நிற்கின்றனர்.
இந்த நிலையில்தான் தமிழ் மக்களின் வாக்குகள் அவர்களுக்கு தேவை. ஆனால் தமிழ் மக்களுக்கு எதுவும் தரமாட்டோம் என்கின்றனர்” என மேலும் குறிப்பிட்டார்.