பிரபாகரன் வாழ்ந்த பூமியில் வந்து ஒரு சிங்கள பௌத்த பிக்கு கேள்வி கேட்கின்றான்!
28 Oct,2019
சர்வதேச அரசியலை ஒரு குட்டிக்கவிதைக்குள் படைத்துள்ளான் பிரசாந்தன் என சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார்
முல்லைத்தீவு – அளம்பில் பகுதியில் இடம்பெற்ற, கவிஞர் பிரசாந்தனின் வலி நிலைத்த வாழ்க்கை என்னும் கவிதை நூல் வெளியீட்டுவிழா நிகழவில் கலந்துகொண்டு கருத்துரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
வட்டுக்கோட்டையில் பிறந்த எனக்கும் முல்லையில் பிறந்த பிரசாந்தனுக்கும் இணைப்பினை ஏற்படுத்தியது அந்த வலி. நீராவியடி செம்மலை பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த பிக்குவின் உடலை எரித்தபொழுது நான்பட்ட வலி இந்த மக்கள் பட்ட வலிதான் எங்களை இந்த இடத்தில் ஒன்றுபடுத்தியுள்ளது இதுதான் தமிழ்தேசியம். தமிழ் மக்களை ஒன்று படுத்தக்கூடிய வலிமைப்படுத்தக்கூடிய சக்தி இந்த தமிழ் தேசியத்திற்கு இருக்கின்றது அதன் எடுத்துக்காட்டாகவே முல்லை பிரசாந் அவர்கள் இருக்கின்றார். இப்படியான பதிவுகள் இங்கு மேற்கொள்ளப்படவேண்டும் இந்த வலிகள் வலிமையாக்கப்படுகின்ற பொழுதுதான் எங்கள் தமிழ் தேசத்திற்கு தீர்வுகிட்டும் நாங்கள் ஒன்றுபட்டு சிந்திக்கவேண்டிய நிலையில்தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
இந்த வலி நிறைந்த வாழ்க்கை நூலில் கவிதை வரிகளாக நீதியினை தரப்போவது யார்? சர்வதேசமா,ஜ.நா.வா, இந்தியாவா, சீனாவா, இல்லை இல்லை இவர்கள்தான் எங்களை முடித்தவர்கள் அழித்தவர்கள் இதற்கு நாங்கள் துணைபோகப்போகின்றோமா? என்ற செய்தியினை கவிதை வடிவில் வடிவாக சொல்லியுள்ளார்.
சர்வதேச அரசியலை ஒரு குட்டிக்கவிதைக்குள் படைத்துள்ளான் இது ஆழமாக பார்க்கப்படவேண்டிய விடையம். எங்கள் இனப்பிரச்சனைக்கு நீதிகோட்டு ஈழத்தில் நடைபெற்ற அழிவிற்கு நீதிகேட்டு குரல்கொடுக்கவேண்டிய கட்டத்தில் நாங்கள் நிக்கின்றோம்.
நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தில் என்னை தாக்கிய பிக்கு என்னை பார்த்து கேட்ட விடையம் இது சிங்களபௌத்த நாடு ஆமத்துறுவிற்குத்தான் முதலாவது இது உனக்கு தெரியாதா? என்று எங்கள் கோட்டைக்குள் தலைவர் வாழந்த பூமியில் வந்து ஒரு சிங்களபௌத்த பிக்கு கேள்வி கேட்கின்றான் என்றால் யார் காரணம்? இடைக்கால வரைபினை ஏற்றது யார்?அதில் பௌத்தத்திற்கு முன்னுரிமை கொடுத்தது யார்? நாங்கள் சிந்தித்து பார்க்கவேண்டும். இந்த கவிதை நூல் ஊடாக எங்களை நாங்களே கேள்விகேட்க வைத்துள்ளான்.
தமிழ் தேசத்தின் நிலத்தினை பாதுகாக்க புறப்பட்டுள்ள தமிழர் மரபுரிமை பேரவை வாழ்ந்து கொண்டிருக்கின்ற முல்லைத்தீவு மண் இந்த தமிழர் மரபுரிமை பேரவை எட்டு மாவட்டங்களுக்கும் கொண்டுசெல்லப்படவேண்டும் எங்கள் தாயக நிலம் காக்கப்படவேண்டும் இதற்கு பலர் இந்த மண்ணில் உருவாக வேண்டும் இவர்களுடன் நாங்களும் துணைநிற்போம் என்றும் சட்டவாளர் க.சுகாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.