வெளிநாடு செல்ல முயற்சித்த இலங்கை தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த கதி!
17 Oct,2019
நியூசிலாந்து செல்ல முற்பட்ட இலங்கை பெண் ஒருவர் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு சென்னை விமான நிலையத்தில் இருந்து மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
“நீர்கொழும்பை சேர்ந்த பெண் ஒருவர் சென்னை வழியாக நியூசிலாந்து செல்வதற்கு, கடந்த 11ம் திகதி சென்னை விமான நிலையம் சென்றிருந்தார்.
எனினும் அவர் சிங்கபூர் செல்லும் விமானத்தில் ஏறாது, ஹொங்கொங் செல்லும் விமானத்தில் ஏறி ஹொங்கொங் சென்றுள்ளார். இதனை அறிந்துகொண்ட அதிகாரிகள் உடனடியாக ஹொங்கொங்கிற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த பெண் ஹொங்கொங்கிலிருந்து மீண்டும் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் வைத்து குறித்த பெண்ணை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது, “இலங்கையில் உள்ள போலி கடவுச்சீட்டு முகவர் ஒருவரின் உதவியுடன், கனடா நாட்டு போலி கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாகவும், உதயமலர் சிவநேசன் என்ற பெயரில் போலி கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக கூறியுள்ளார்.
மேலும் சென்னையில் இருந்து ஆக்லாந்து செல்லவும் டிக்கெட் எடுத்துக் கொடுத்துள்ளார். இதற்காக அந்த முகவருக்கு முற் பணமாக ரூ.4 லட்சம் கொடுத்துள்ளார்.
இரண்டு கடவுச்சீட்டுகளுடன், சென்னை விமான நிலையத்துக்கு வந்த குறித்த பெண் கடவுச்சீட்டு மூலம் ஆக்லாந்து செல்ல முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த பெண்ணை அதிகாரிகள் இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.