மாவைக்கு என்ன லூசா? தலை பிழையா?: கடுப்பாகிய சங்கரி!
06 Sep,2019
மாவை சேனாதிராசாவிற்கு லூசா, தலை பிழையா என காட்டமாக கேட்டுள்ளார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி.
யாழ்ப்பாணத்தின் ஆனைக்கோட்டையில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே இப்படி கேள்வியெழுப்பியுள்ளார்.
“யுத்தம் நடந்தபோது, அந்த மக்களை காப்பாற்ற எதுவும் செய்யாமல் இந்தியாவிற்கு ஓடிப்போய் இருந்து விட்டு, இப்பொழுது வந்து சேனாதி சொல்கிறது, யுத்தத்தில் உயிரிழந்தவர்களிற்கு நினைவு மண்டபம் கட்டப் போகிறேன் என.
இல்லை, நான் கேட்கிறேன்- உனக்கு என்ன லூசா? தலை பிழையா?. தலை பிழையென்றால் எங்கேயாவது கட்டிவிட்டு இரு.
உடமையை, உறவுகளை, பிள்ளைகளை இழந்து- எல்லாவற்றையும் இழந்துவிட்டு வந்து நிற்கிறார்கள். அவர்கள் யுத்தத்தில் சிக்கியிருந்தபோது, செய்ய வேண்டியவற்றை செய்யாமல், இப்பொழுது எதற்காக இது? எமக்கு இது தேவையில்லை.
ஜனாதிபதி ஏமாற்றி விட்டார், ரணில் ஏமாற்றி விட்டார் என எல்லா இடமும் சொல்கிறார். போன கிழமை ஜனாதிபதி யாழ்ப்பாணம் வந்தபோது, ஹீ என பல்லைக்காட்டிக் கொண்டு போய் நிற்கிறார். ஜனாதிபதி ஏமாற்றி விட்டார் என்றுவிட்டு, போய் நிற்கிறார்கள்.
சுமந்திரனும் போய் நின்றார். சுமந்திரனின் கடவுள் ரணில் விக்கிரமசிங்க. அவரும் போனார். ஜனாதிபதிக்கு அங்கால மூன்றாவது வரிசையில் அவரை இருக்க வைத்தார்கள்.
ஜனாதிபதி அவரை திரும்பியும் பார்க்கவில்லை. பிறகு ஆளுனர்தான் சொன்ன பிறகு, கைகொடுத்தார் ஜனாதிபதி. வெட்கம் கெட்டவர்கள்“ என்றார்.