இந்தியாவில் இலங்கை அகதிகள் முகாமிற்குள் நடக்கும் மர்மம்; அச்சத்தில் பெண்கள்!
22 Aug,2019
விருத்தாசலம் இலங்கை அகதிகள் முகாமிற்குள், நிர்வாணமாக நடமாடும் மர்ம நபர்களின் அத்துமீறல் சம்பவங்கள் அதிகரித்ததால், பெண்கள் பாதுகாப்பு கோரி, பொலிஸ் நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டி வளாகத்தின் பின்புறம், இலங்கை அகதிகள் முகாம் உள்ளது.
76 குடும்பங்களை சேர்ந்த, 250 பேர் இங்கு வசிக்கின்றனர்.
இந்த முகாமில், சமீப காலமாக, மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில மாதங்களாக, முகாமிற்குள் நள்ளிரவில் நுழையும் மர்ம நபர்கள், குடியிருப்புகளுக்குள் புகுந்து நிர்வாணமாக நிற்பதும், வீடுகளின் கதவுகளை தட்டி அழைப்பதாக, முகாம் மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
நேற்று அதிகாலை, 12:30 மணியளவில், முகாம் செயலர், லதா என்பவரது வீட்டின் குளியல் அறையில், மர்ம நபர் ஒருவர், நிர்வாணமாக நின்றுள்ளார்.
லதாவின் அலறல் கேட்டு, அங்கிருந்தவர்கள், மர்ம நபரை விரட்டி அடித்துள்ளனர்.
அதிகாலை, 2:00 மணியளவில் அங்கு வந்த மற்றொரு நிர்வாணமான மனிதன் அங்கு நின்ற நபரின் உடைமைகளை கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
அவரை, முகாமில் வசிப்பவர்கள், சுற்றிவளைத்து பிடித்து விருத்தாசலம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில், முகாம் தலைவர், கந்தசாமி, செயலர், லதா மற்றும் பெண்கள், பாதுகாப்பு கோரி, விருத்தாசலம் பொலிஸ் நிலையங்களில், நேற்று பகல், 11:00 மணியளவில் தஞ்சம்அடைந்தனர்.
நேற்று முன்தினம் இரவு பிடிபட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக, பொலிஸார் உறுதியளித்தனர். அதை ஏற்று, பிற்பகல், 1:00 மணியளவில் மக்கள் கலைந்து சென்றனர்