தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டும் :
21 Jul,2019
நுவரெலியா கந்தப்பளை சர்ச்சை, நீராவியடிப்பிள்ளையார் ஆலய விவகாரம், கன்னியா வெந்நீரூற்று விவகாரம் உள்ளிட்ட அனைத்திலும் பௌத்த பேரினவாதமே தலைதூக்கியுள்ளது. மலையகம், வடக்கு, கிழக்கு என்று அனைத்துப் பகுதிகளிலும் தாம் வேரூன்ற வேண்டும் என்றே பேரினவாதிகள் கருதுகிறார்கள். இத்தகையதொரு சூழ்நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டும்.
அதேபோன்று முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும் விடுக்கொடுப்புடன், ஒரு மனம் திறந்த பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். அவ்வாறு ஒன்றிணைந்து செயற்படாவிடின், இந்த பேரினவாத சக்திகளை எதிர்க்க முடியாது என்று அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:
இனப்பிரச்சினை முடிவிற்குக் கொண்டுவரப்பட்டு பத்து ஆண்டுகள் பூர்த்தியடைந்திருக்கின்றன. இன, மதத்தை முன்னிறுத்தி செயற்பட்டவர்களாலேயே அப்போது இனப்பிரச்சினைக்கு தூபமிடப்பட்டது.
தற்போது மீண்டும் அத்தகைய இனவாத செயற்பாடுகள் சிலரால் முன்னெடுக்கப்படுகின்றன என அவர் தெரிவித்தார்.
https://www.virakesari.lk/article/60833
ஆகஸ்ட் 5ம் திகதி ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணி
ஐக்கிய தேசிய முன்னணி,புதிய கூட்டணி அமைப்பதற்காக ஆகஸ்ட் 5ம் திகதி புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட உள்ளதாக தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், அன்றைய தினம் புதிய கூட்டணியின் சின்னம் முன்வைக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளார்.
அவிஸ்ஸாவனை, புவக்பிட்டிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மிகவும் பிரபலமான கட்சியை பிளவுபடுத்தி இல்லாமல் ஒழிப்பதற்கு முயற்சிக்க வேண்டாம் என்று ஐக்கிய தேசிய கட்சிக்குள் குழு அமைத்துக் கொண்டிருப்பவர்களிடம் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.