அரசமைப்பு சீர்த்திருத்தத்தின் ஊடாக அதிகாரப்பகிர்வு - இலங்கைக்கு பிரிட்டன் வேண்டுகோள்
19 Jul,2019
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும் என பிரிட்டன் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அன்றூ மியுரிசன் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
மனித உரிமை பேரவைக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு பிரிட்டன் தொடர்ந்தும் இலங்கையை வலியுறுத்தி வருவதுடன் ஆதரவு வழங்கி வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நீதி மற்றும் நிரந்தர நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இதுவே மிகச்சிறந்த கட்டமைப்பு என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டிஸ் அரசாங்கம் தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்திற்கு இதனை வலியுறுத்தி வருகின்றது பிரிட்டிஸ் தூதுவரும் இதனை தெரிவித்து வருகின்றார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றுவதற்கு இலங்கை இன்னமும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைஅரசாங்கத்தை அரசமைப்பு சீர்திருத்தத்தின் ஊடாக அர்த்தபூர்வமான அதிகாரப்பகிர்வை வழங்குமாறு பிரிட்டனின் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்