எமது பாதுகாப்பிற்கு எப்ப வேண்டுமானாலும் ஆயுதம் தூக்க தயாராகவே இருக்கின்றோம் -சித்தார்த்தன்
19 Jul,2019
யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு கடந்ந 15 ஆம் திகதி வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவின் பரிசளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்ட சமயம் கல்லூரி மாணவர்களின் கடேற் பிரிவினரின் வரவேற்பு அணிவகுப்பு இடம்பெற்றது.
இதன்போது மாணவர்கள் துப்பாக்கி ஏந்தி நின்றமை தொடர்பில் கூறப்படும் கருத்துக்கள் தொடர்பில் எமது பாதுகாப்பிற்கு எப்ப வேண்டுமானாலும் நாம் ஆயுதம் தூக்கவும் தயாராகவே இருக்கின்றோம் என்பதனை எமது மாவட்ட இளைஞர்கள் பிரதமரின் கண் முன்னாலேயே நிரூபித்துள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
(இவ் அணிவகுப்பு மரியாதையினை இராணுவத்தால் பயிற்சி வழங்கப்பட்ட “மாணவ சிப்பாய் படையணி” (கடேற்) அணியினர் வழங்கியிருந்தனர்.)
இது தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில், மாணவர்கள் கையில் ஆயுதம் தூக்கி போராட்டத்திற்கு அழைப்பு விடவில்லை.
இதேநேரம் இந்த மாணவர்களை இவ்வாறு அணி நடைக்கு பயன் படுத்துவது அவர்கள் ஆயுதம் வைத்திருந்தமை அனைத்தும் எமது அரசியலிற்கு உட்பட்டது அல்ல மாறாக அவை அனைத்தும் பாடசாலையினதும் கல்வித் திணைக்களத்தினதும் முடிவாகும்.
கடேற் மாணவர் படைப் பிரிவு என்பது இலங்கை முழுவதும் உண்டு அது குடாநாட்டிலும் உண்டு இதே கல்லூரியிலும் உண்டு.
இந்த பிரிவினரே பிரதமரின் வரவேற்பு அணிநடையில் பயன் படுத்தப்பட்டனர். இங்கே பிரதமரிற்கு ஓர் செய்தி சொல்லப்பட்டுள்ளது அதாவது தேவை ஏற்பட்டால் எமது பாதுகாப்பிற்கு எப்ப வேண்டுமானாலும் நாம் ஆயுதம் தூக்கவும் தயாராகவே இருக்கின்றோம் என்பதனை எமது மாவட்ட மாணவ இளைஞர்கள் பிரதமரின் கண் முன்னாலேயே நிரூபித்துள்ளனர் என மேலும் தெரிவித்துள்ளார்