யாழ் பல்கலைக் கழகத்தினுள்ளும் முஸ்லீம்கள் செல்ல முயற்ச்சி:
24 Jun,2019
யாழ் பல்கலைக்கழகத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு கிடைத்துள்ள 454 விண்ணப்பங்களில் 137 விண்ணப்ப படிவங்கள் முஸ்லீம்களின் விண்ணப்ப படிவங்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பல்கலைக் கழகத்தில் நீண்டகாலமாக காணப்படும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதன் பிரகாரம் குறித்த வெற்றிடங்களிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களால் பரிந்துரைக்கக்படும் விண்ணப்பதாரிகளை நேர்முகத் தேர்விற்கு உட்படுத்தி அவர்களில் தகுதியானவர்களை நியமிக்க முடியும் என்பது விதிமுறை.
அதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர்களால் சிபார்சு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் நேரடியாக சமர்ப்பித்த விண்ணப்பங்களில் இருந்து முதல் கட்டமாக 454 பேரை நேர்முகத் தேர்விற்கு உட்படுத்தும் வகையில் உயர் கல்வி அமைச்சில் விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்பங்களில் , முகாமைத்துவ உதவியாளர் பணிநிலை தவிரந்த ஏனைய பணிநிலைக்காக 137 முஸ்லீம் விண்ணப்பதாரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ள விண்ணப்பங்கள் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிபார்சு செய்த பெயர்ப் பட்டியலில் காணப்பட்டுள்ளது.
எனவே குறித்த விடயம் தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒட்டு மொத்தத்தில் எல்லா இடங்களில் உள்ளே புகுந்து ,தமது செல்வாக்கை உயர்த்த மூனாக்கள் முடிவு செய்துள்ளார்கள் போலும்