உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் கோத்தபாய? அம்பலமாகும் ரகசியம்
24 Jun,2019
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை தாக்குதலுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே பொறுப்பு கூற வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் தெரிவு குழு உறுப்பினராக இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைக்கமைய தாக்குதலுக்கான பொறுப்பை யாரிடம் வழங்குவது என்ற நிகழ்ச்சி தொகுப்பாளர் எழுப்பிய கேள்வியின் போது அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச, குற்றவாளிகளான பயங்கரவாத அமைப்பின் 26 பேருக்கு சம்பளம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டில் சட்டத்திற்கு முன் கொண்டு சென்றால் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினை ஏற்படும் எனவும், தற்போதை அரசாங்கத்தின் மீது விரல் நீட்டியமையே இவ்வாறான விடயங்களை நாட்டிற்க்கு வெளிப்படுத்த காரணமாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தாக்குதல் தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தின் சிலரும் பொறுப்புக்கூற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்