திருகோணமலை- கோணேஸ்வர் கோயிலில்பூசகரால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடுகளை
19 Jun,2019
திருகோணமலை- கோணேஸ்வர் கோயிலில் பணிபுரிந்த பூசகர் ஒருவரினால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடுகளை அவரது மகனிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று (19) பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
1996 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி திருகோணமலை கோணேஸ்வர் கோயிலில் பூசகராக கடமையாற்றிய சிவகாட்சி விசா கேஸ்வர ஐயர், அவரது மனைவியான சொக்கலிங்கம் சிவபால சுந்தரப்பிள்ளை குரேஷ்வரி அம்பிகா என்பவரை கழுத்தில் கயிற்றை கட்டி நெரித்து கொலை செய்த குற்றச்சாட்டு தொடர்பிலான வளக்கு இன்று திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.இதன் போதே நீதிபதி மேற்படி உதரவை வளங்கினார்
2009.3.13ஆம் திகதி இவ்வழக்கின் தீர்ப்பாக திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் குறித்த பூசகருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய மரணதண்டனை எனும் தீர்ப்பு பிழையானது என குறித்த எதிரியான ஐயரினால் மேன்முறையீடு உச்ச நீதிமன்றில் செய்யப்பட்டிருந்தது
அதையடுத்து அதனை ஆராய்ந்த குறித்த உச்ச நீதி மன்று தீர்பை மீளவும் உறுதி செய்தது.
இந்நிலையில் அந்தத் தீர்ப்பை வாசித்து காண்பிப்பதற்காக குறித்த குற்றவாளி இன்று நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
இன்றைய தினம் குற்றவாளிக்கு மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனினால் உயர்நீதிமன்ற தீர்ப்பு வாசித்து விளங்க படுத்தப்பட்டது.
மேலும் குறித்த குற்றவாளியின் இறந்த மனைவியின் எலும்புக்கூடுகள் தற்போது பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் வழக்கு அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் குற்றவாளியிடம் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனினால் எலும்புக்கூடுகளின் இறுதிக்கிரியைகளை மேற் கொள்ளப் போகின்றீர்களா என வினவியபோது தனது மகனை அழைத்து அவரிடம் ஒப்படைக்குமாறு மன்றில் குற்றவாளி தெரிவித்தார்
அதன் பிரகாரம் குறித்த எலும்புக்கூடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஊடாகவும் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஊடாகவும் நடவடிக்கை எடுப்பதுடன்,
மேற்குறிப்பிடப்பட்ட குற்றவாளியினுடைய மகனை எதிர்வரும் எட்டாம் மாதம் ஐந்தாம் திகதி மன்றில் ஆஜராக அறிவிக்குமாறு பொலிசாருக்கு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த குற்றவாளியையும் அன்றைய தினத்தில் மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு எதிர்வரும் எட்டாம் மாதம் ஐந்தாம் திகதி அழைக்கப்படும் என திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்தார்.