தமிழர்களின் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வுகளை பெற்றுத்தர உறுதுணையாக நிற்க வேண்டும் -
09 Jun,2019
தமிழர் தரப்பின் நீண்டகால நியாயமான கோரிக்கைகளை கருத்தில் கொண்டு தமிழ் மக்களின் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வுகளை பெற்றுத்தர பாரத பிரதமர் உறுதுணையாக நிற்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இந்திய பிரதமருக்கு வலியுறுத்தியுள்ளார்.
தமிழர் தரப்பு பிரச்சினைகள் குறித்து ஆராய டெல்லியில் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்துதர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று இலங்கைக்கான அரச முறைமை விஜயத்தை மேற்கொண்டிருந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்திர்த்திருந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் அவர் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
சுமார் 15 நிமிடங்கள் இரு தரப்பினரும் கலந்துரையாடியிருந்தனர். இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இந்த சந்திப்பில் தலைவர் சம்பந்தனுடன், உறுப்பினர்களான சுமந்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதற்கு பதிலளித்த இந்தியப் பிரதமர் மோடி, தூதரக மட்டத்தில் இது குறித்து பேசி ஒரு தீர்மானம் எடுக்கலாம் எனவும் தமிழ் தேசிய கூட்டமைபுடனான சந்திப்புகளை நடத்த துரித ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் வாக்குறுதியளித்துள்ளார்.